பாகப்பிரிவினை வழக்குகளுக்கு காலக்கெடு உண்டா ? - உச்சநீதிமன்ற தீர்ப்பு
பாகப்பிரிவினை வழக்குகளுக்கு காலக்கெடு உண்டா ? - உச்சநீதிமன்ற தீர்ப்பு !
.
1960-ல் ஒரு தாயும் மகனும், மற்ற மகன்கள் மீது குடும்பச் சொத்துக்களைப் பொறுத்து பாக வழக்கு போட்டார்கள் .நிலங்கள் அல்லாத சில அசையாச் சொத்துக்களையும் அசையும் சொத்துகளையும் பாகம் செய்ய வேண்டும் என்பது வழக்கு !
கீழ்கோர்ட்டில், வழக்கு நடந்து, 1964-ல் பாகப் பிரிவினை வழக்கில் முதல் தீர்ப்பு வருகிறது ! மூன்றில் ஒருபாகம் வாதிகளுக்கு பாக உரிமை உள்ளது என முதல் நிலைத் தீர்ப்பானை வருகிறது. இதை Preliminary Decree என்பர் முதல் நிலைத் தீர்ப்பில், வழக்குப் போட்டவர்கள் பாகம் பெற உரிமை உள்ளவர்களா என்றும், அப்படியென்றால், அவர்களுக்கு எவ்வளவு பாகம் உரிமை உள்ளது என்றும் தீர்ப்பு வரும் ! அதன் அடுத்த கட்டமாக பைனல் டிகிரி (Final Decree) க்கு மனுச் செய்ய வேண்டும் . அதில், அவ்வாறு பாகம் கேட்டவரின் பாகத்தை, அளந்து பிரித்து தனியாக கோர்ட் தனி அனுபவத்துக்குக் கொடுக்கும்; இதுவே பொதுவான நடைமுறை.
இந்த வழக்கில், 1964-ல் முதல்நிலை தீர்ப்பானையை கோர்ட் கொடுத்தது. ஆனால் வாதிகள் 1987-ல் (சுமார் 23 வருடங்கள் கழித்து) பைனல் டிகிரி வழங்கும்படி கோர்ட்டை அணுகுகிறார்கள்! எதிர்ப்பாரட்டிகள் “இது காலதாமதமான மனு என்றும், ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு காலக்கட்டம் உள்ளது என சட்டம் சொல்லி உள்ளது என்றும் அவ்வாறான காலகட்டம் சொல்லாமல் விட்ட விஷயங்களுக்கு காலக்கெடு சட்டம் 1963-ல் தனியே ஒரு பிரிவு உள்ளது என்றும், அது பிரிவு 137 என்றும், அதன்படி மூன்று ஆண்டுகளுக்குள் பைனல் டிகிரி கேட்டு மனுச் செய்ய வேண்டும் என்றும், ஆனால் இங்கு இந்த வழக்கில் வாதிகள் சுமார் 23 வருடங்கள் கழித்து அந்த பைனல் டிகிரி மனுவைப் போட்டிருக்கிறார்கள் என்பதால் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோர்ட்டில் வாதிடுகிறார்கள். அதற்கு ஆதாரமாக முன் வழக்கான Sital Prashad vs. Kishori Lal (AIR 1967 SC 1236 என்ற வழக்கையும், பழைய பிரைவி கவுன்சில் வழக்கான Saiyid Jowad Hussain vs. Gendan Singh, AIR 1926 PC 93 என்ற வழக்கையும் முன்தீர்ப்பாக காண்பிக்கிறார்கள்.
இதைப் பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் கீழ்கண்டபடி தீர்ப்பை வழங்குகிறது.
பாகப் பிரிவினை என்பது ஏற்கனவே உரிமை உள்ள சொத்தில், பாகங்களை மட்டும் ஒதுக்கிக் கொள்வது; அதில் புதிதாக எந்த உரிமையும் ஏற்படுத்திக் கொள்வதில்லை; பலர் கூட்டாக அனுபவித்து வந்த சொத்தை, தனித்தனியாக அவரவர் பாகமாக ஒதுக்கித் தருவது மட்டுமே பாகப்பிரிவினை என்பது ஒரு சொத்தில் கூட்டு உரிமை இல்லாதவர், வழக்கில் ஒரு பார்ட்டியாக சேர முடியாது பாகம் என்றாலே பிரித்துக் கொள்வது என்பதே
கூட்டுப் பாகஸ்தர்கள் எல்லோரும் தனித்தனியே சொத்தைப் பிரித்துக் கொண்டால் அது பாகப்பிரிவினை When all the co-owners get separated, it is a partition. ஆனால், அதில் ஒருவர் அல்லது இருவர் மட்டும் பிரித்துக் கொள்கிறார்கள், மற்றவர்கள் மறுபடியும் சேர்ந்தே சொத்தை அனுபவிக்கிறார்கள் என்றால் அது ஒரு பகுதி பாகப்பிரிவினையாகும். If only one brother wants to get his share separated and other three brothers continue to remain joint, there is only a separation of the share of one brother*.
இப்படி எந்தப் பாகப்பிரிவினையாக இருந்தாலும் (தனித்தனி பாகங்களாகப் பிரித்தாலும், ஒருவர் மட்டும் தன் பாகத்தைப் பிரித்துக் கொண்டு விலகினாலும்), இதில் கோர்ட் இரண்டு டிகிரிகளை கொடுக்க வேண்டும்! ஒன்று பாக உரிமை உள்ளதா, அப்படியென்றால் எவ்வளவு பாகம் என்று முடிவு செய்வதைPreliminary Decree என்னும் முதல்நிலை தீர்ப்பானை என்றும், அப்படி முடிவு செய்தபின்னர், அதே கோர்ட், அந்தப் பாகங்களை தனித்தனி துண்டுகளாக பிரித்து அவரவர் பாகமாக ஒதுக்கி, அதன் அனுபவத்தை அவரவருக்கு கொடுப்பது Final Decree என்னும் இறுதிநிலை தீர்ப்பானை. இத்துடன் பாகப் பிரிவினை வழக்கு முடிவுக்கு வருகிறது
முதல்நிலை தீர்ப்பானையில், இன்னும் கோர்ட் செய்ய வேண்டிய வேலை உள்ளது என்பதை குறிக்கும்; பைனல் டிகிரியில் வேலை முடிந்து விட்டது என்பதாகும்
ஆனால், Decree என்றால் என்ன என்று சிபிசி சொல்கிறது.இரண்டு பார்ட்டிகளுக்கு இடையில் உள்ள பிரச்சனையை அறுதியான முடிவுக்கு கொண்டு வந்தால் அது டிகிரி எனப்படும். ஆனால், Order என்பதும் டிகிரி போலவே இருக்கும் ஆனால், அது டிகிரி அல்ல இதற்கும் அதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், டிகிரியில் முடிவான முடிவு இருக்கும்! ஆர்டரில், முடிவு இருக்கும் ஆனால் அது மொத்த பிரச்சனையின் முடிவான முடிவாக இருக்காது!! ஒரு வழக்கில் எல்லாப் பிரச்சனையையும் முடிவான முடிவுக்கு கொண்டு வந்து தீர்ப்புச் சொன்னால் அது டிகிரி; அந்த வழக்கில் ஒரு பிரச்சனையை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கு மட்டும் முடிவு சொன்னால் அது ஆர்டர் ! சில ஆர்டர்களின் மீது அப்பீல் போகலாம்! சில ஆர்டர்களின் மீது அப்பீல் போக முடியாது!! ஆனால் எல்லா டிகிரியின் மீதும் அப்பீல் போகலாம்; இவ்வளவுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்
The word Decree is defined in Sec.2(2) of CPC.
The word Preliminary Decree is explained in Order 20 R18(2) of CPC.
விவசாய நிலங்களாக இருந்து அதை பிரித்துக் கொடுக்க நினைத்தால், அதை அந்தக் கோர்ட் ஆர்டர் 20 ரூல் 18(1) மற்றும் பிரிவு 54 ன் படி சொத்தை பாகப்பிரிவினை செய்து தனித்தனியே பிரித்துக் கொடுக்கச் சொல்ல வேண்டும்
விவசாய நிலம் அல்லாத மற்ற அசையாச் சொத்துக்களாக இருந்தால், பிரிவு 54 மற்றும் ஆர்டர் 20 ரூல் 18(2)-ன்படி முதல் நிலை தீர்ப்பானை வழங்கி, பாகத்தை முடிவு செய்து தீர்ப்புக் கொடுக்க வேண்டும். பின்னர், அந்த பாகத்தை கோர்ட்டே ஒரு வக்கீல்-கமிஷனர் மூலம் தனித்தனியே பிரித்துக் கொடுத்து, அதை உறுதிசெய்து பைனல் டிகிரி வழங்க வேண்டும். அத்துடன் அந்த வழக்கு முடிவுக்கு வந்துவிடும்;
முதல்நிலை தீர்ப்பின் மீது அப்பீல் போகலாம்! அவ்வாறு அப்பீல் போகாமல் இருந்துவிட்டால், அதைத் தொடர்ந்து வழங்கும் பைனல் டிகிரிமீது அப்பீல் போகமுடியாது! ஆக, முதல் நிலை தீர்ப்பானையே டிகிரி என்ற வரைமுறையில் வரும்.பைனல் டிகிரி என்பது, முதல்நிலை தீர்ப்பானையை தீர்த்துவைக்கும் வேலையே என்பது சரியாகும்
முதல்நிலை தீர்ப்பானை வழங்கிய பின்னர், எவ்வளவு காலத்துக்குள் பைனல் டிகிரிக்கு மனுச் செய்ய வேண்டும் என்பதில் பல கோர்ட்டுகள் பல தீர்ப்புகள் வழங்கி உள்ளன ஆனால்
எல்லா வழக்குகளுக்கும் காலக்கெடு உள்ளது .எனவே எல்லா வழக்குகளையும் அந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்! காலம் தவறினால், அந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது.அப்படியென்றால், பாக வழக்கில் முதல்நிலை தீர்ப்பானை வழங்கியபின், எவ்வளவு காலத்துக்குள் பைனல் டிகிரிக்கு மனுச் செய்ய வேண்டும்; அப்படி ஏதும் பைனல் டிகிரிக்கு அந்தச்சட்டத்தில் (The Limitation Act, 1963) குறிப்பிட்டுச் சொல்லவில்லை ஆனாலும், அந்த சட்டத்தில், அவ்வாறு காலக்கெடு ஏதும் சொல்லாத வழக்குகளில் மூன்று ஆண்டுகளுக்குள் மனுச் செய்ய வேண்டும் என்று பொதுவாகச் சொல்லி உள்ளது . எனவே அதை இந்த பைனல் டிகிரிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பல கோர்ட்டுகள் பல வழக்குகளில் முடிவு செய்துள்ளன
மற்றும், சாதாரணமாக ஒரு வழக்கில் ஒரு டிகிரியை பெற்றால், அதை 12 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் . பணம் கேட்டு போட்ட வழக்கில் கிடைத்த தீர்ப்பை, தீர்ப்பு வழங்கிய நாளில் இருந்து 12 ஆண்டுகளுக்குள் வசூலித்துக் கொள்ள வேண்டும் . அதற்குமேல் அந்த டிகிரியை உபயோகப் படுத்த முடியாது*;
ஆனால், பாகப் பிரிவினை வழக்கில் கொடுக்கப்பட்ட முதல்நிலை டிகிரியை எவ்வளவு காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வதில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன
முதல்நிலை தீர்ப்பானைதான் முடிவான தீர்ப்பானை எனலாம்; அதற்குப்பின் அதை நிறைவேற்ற தனியே மனு ஏதும் செய்யத் தேவையில்லை! தீர்ப்பு வழங்கிய கோர்ட்டே தொடர்ந்து அந்த வேலையைச் செய்து பைனல் டிகிரியை கொடுத்து வழக்கை முடிக்க வேண்டும். முதல் நிலை தீர்ப்பானையின் தொடர்ச்சியே பைனல் டிகிரி ஆகும்! அதை ஒரு டிகிரியை நிறைவேற்றும் மனு என்று தனியே கணிக்கக் கூடாது தொடர் நிகழ்வே எனவே அதற்கு காலக்கெடு ஏதும் இல்லை; எப்போது வேண்டுமானாலும், ஒரு பாக வழக்கில் கொடுத்த முதல்நிலை டிகிரியை நிறைவேற்றலாம் அப்படியென்றால், இப்படிபட்ட வழக்குகள் பல ஆண்டுகள் நிறைவேற்றாமல் இருந்துவிடுமே! எனவே இதற்கு ஒரு முடிவு தெரியவேண்டும். என்பதால், அப்படிப்பட்ட பாக வழக்கில் முதல் நிலை டிகிரி கொடுத்த கோர்ட்டே, அதைத் தொடர்ந்து -பார்ட்டிகளுக்கு சம்மன் அனுப்பி, சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்; அதற்கு காலக் கெடு ஏதும் சட்டத்தில் இல்லாத போதிலும், கோர்ட்டே எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வழக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் இதில் பார்ட்டிகள் மனுச் செய்தால்தான் கோர்ட் அந்த பைனல் டிகிரி மனுவை எடுத்துக் கொள்ளும் என்று இருந்துவிடக் கூடாது
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கில் தீர்ப்புக் கொடுத்துள்ளது;
இனி வரும்காலங்களில், பாக வழக்கில் முதல்நிலை தீர்ப்பு வந்தபின்னர், *பைனல் டிகிரிக்கு மனுச் செய்தாலும், அதற்கு காலக் கெடு ஏதும் இல்லை என்பதை சுப்ரீம்கோர்ட் உறுதிசெய்துள்ளது.
Comments