பேரறிவாளன் எந்த குற்றமும் அற்றவர்
பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை அவரது வீட்டில் சந்தித்துள்ள நிலையில், பேரறிவாளன் எந்த குற்றமும் அற்றவர் என வைகோ தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
“பேரறிவாளன் நிரபராதி, எந்த குற்றமும் அற்றவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அவருக்கு எந்த தொடர்பும் கிடையாது. இறுதியில் நீதி வென்றது. ” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பேரறிவாளன்:”அண்ணனுக்கு நன்றி சொல்வதற்காக நானும் அம்மாவும் வந்துள்ளோம்.நான் சிறைக்கு செல்லும் முன் இதே வீட்டிற்கு வந்துள்ளேன், சாப்பிட்டுள்ளேன். சிறையில் ஒரே காலத்தில் இருந்துள்ளோம்.அண்ணனுடன் இருந்த மகிழ்ச்சியான தருணம் அந்த காலம்.
மேலும், எனக்கு தூக்கு தண்டனை வரும்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி அவர்களிடம் சென்று எங்களுக்காக அண்ணன் பேசினார் , மனு கொடுத்தார். அதன்பிறகு வாஜ்பாய் அவர்களிடமும் மனு கொடுத்தார். எனவே அவருக்கு நன்றி சொல்ல நானும் அம்மாவும் தற்போது வந்துள்ளோம்”, என்று தெரிவித்தார்.
நன்றி: தண்டோராடைம்ஸ்.காம்
Comments