அண்ணன் காட்டிய வழியம்மா - இது அன்பால் விளைந்த பழி அம்மா !

 கவிஞர் கண்ணதாசன்




கண்ணதாசனும் , அறிஞர் அண்ணாதுரையும் 60 களில் , (கண்ணதாசன் தி.மு.க. வில் இருந்த போது) நெருங்கி பழகி வந்தனர் ! அவர்கள் உறவு அண்ணன் - தம்பி உறவு
போல் இருந்தது. அனேக மேடைகளில் ஒன்று சேர காணப்பட்டனர் ! பின்னர் வந்தது பிளவு !
கணணதாசன் தி.மு.க . வை விட்டுப் பிரிந்தாரா அல்லது அந்த கட்சியை விட்டு நீக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை ! எனினும் கண்ணதாசன் மனதில் அண்னா செய்த செயல்கள் அவரது மனதைப் பாதித்தன ! எப்போது சமயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ! வேளை வந்தது !
சிவாஜி நடித்த " படித்தால் மட்டும் போதுமா ? " என்ற படத்தில் ஒரு பாடல் :
" என்ன " சிச்சுவேஷன் " ? --- கண்ணதாசன்.
' அண்ணே, அண்ணன் ( கே.பாலாஜி ) , தம்பிக்கு ( சிவாஜி ) ஒரு துரோகம் செய்கிறான். இதை நினைத்து தம்பி மனம் உடைகிறான் ! ஆனால் நடந்த உண்மையை வெளியே சொல்ல முடியாத நிலைமை தம்பிக்கு ! இது தான் " சிச்சுவேஷன் " " ---- எம்.எஸ். விஸ்வநாதன்.
கண்னதாசனுக்கு கேட்கவா வேண்டும் ! மனதில் இருந்த காயததை ஆற்ற இதை விட வேறு சந்தர்ப்பம் ஒரு கவிஞனுக்கு வேண்டுமோ ? எழுதினார் !
"அண்ணன் காட்டிய வழியம்மா - இது
அன்பால் விளைந்த பழி அம்மா !
கண்ணை இமையே பிரித்ததம்மா - என்
கையே என்னை அடித்தம்மா ! "
என்று பேனா வை வைத்து அண்ணாவை அடித்தார் ! அது மட்டுமா,
" அவனை நினைத்தே நான் இருந்தேன் - அவன்
தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் - இன்னும்
அவனை மறக்கவில்லை - அவன்
இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை "
என்று தன்னிலை விளக்கமும் கொடுத்தார் !
இந்த பாடல் படத்திற்கும் பொருந்தியது என்று சொல்லவும் வேண்டுமோ !
அறிஞர் அண்ணா
இந்த பாடலைப் பற்றி தி.மு.க வினர் சிலர் அண்ணாவிடம் "போட்டுக்" கொடுத்து இருவர் பகையில் குளிர் காய்க்க கணக்கு போட்டனர் ! அதற்கு அண்ணா சொன்ன பதில் ! :
"போகட்டும் விடுங்கய்யா ! என்னை அவன் நல்ல தமிழில் தானே திட்டுகிறான் , திட்டி விட்டுப் போகிறான் ! விட்டு விடுங்கள் ! என்றாராம்.
நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,