இசையமைப்பாளர்களை விளாசிய இளையராஜா!
போட்ட மியூசிக்கையே போடுறாங்களே.. கேட்கமாட்டீங்களா? இசையமைப்பா
ளர்களை விளாசிய இளையராஜா!
புதிய இசையமைப்பாளர்கள் போட்ட மியூசிக்கையே போட்டு உங்களை ஏமாத்துறாங்களே அதையெல்லாம் கேட்க மாட்டீங்களா? என இளையராஜா பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சமீப காலமாக இளையராஜாவை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் சுழன்று வரும் நிலையில், நேற்று நடந்த யுவன் 25 நிகழ்ச்சியில் அவர் பேசியது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அனிருத், ஜிவி பிரகாஷ், தமன் உள்ளிட்ட இளம் இசையமைப்பாளர்களை தான் இளையராஜா இப்படி கிண்டல் அடிக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 25 ஆண்டுகளை யுவன் சங்கர் ராஜா நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் விதமாக பிளாக்ஷீப் டீம் உடன் இணைந்து நேற்று யுவன் 25 நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜாவின் அப்பா இளையராஜா கலந்து கொண்டு மகனை பற்றி பெருமையாக வாழ்த்தி பேசினார்.
இசை விழாவில் கலந்து கொண்டு தன்னை வாழ்த்திய தனது தந்தைக்கு மேடையில் யுவன் சங்கர் ராஜா அன்பு முத்தத்தை பரிசளித்தார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு டிரெண்டாகி வருகிறது. அப்பாவும் மகனும் எப்படி பாசமாக உள்ளனர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தனது மகன் யுவன் சங்கர் ராஜாவின் சாதனைகளை வாழ்த்தி பேசிய இளையராஜா, இளம் இசையமைப்பாளர்களை விமர்சனம் செய்யும் விதமாக "இப்ப இருக்கும் புதிய இசையமைப்பாளர்கள் போட்ட மியூசிக்கையே போட்டு உங்களை ஏமாத்துறாங்களே.. அதையெல்லாம் ஏன் கேட்க மாட்றீங்க" என மக்களை பார்த்து கேட்டது பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளது
சமீப காலமாக தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக அனிருத் வலம் வருகிறார். ஜி.வி. பிரகாஷ் மற்றும் தமன் போடும் பாடல்கள் வேற லெவலில் ஹிட் அடித்து வருகின்றன. யுவன் சங்கர் ராஜாவும் புதிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர்களில் யாரை குறிப்பிட்டு விமர்சிக்கிறார் இளையராஜா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது
தவறு இல்லை இளம் இசையமைப்பாளர்களை மிகப்பெரிய இசையமைப்பாளரே இப்படியொரு இசை நிகழ்ச்சியில் விமர்சிப்பது சரியா? என்கிற கேள்வியும் அவர் மீதுள்ள மதிப்பு போயிடுமே என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். அதே நேரத்தில் இப்போ வர பாடல்கள் எல்லாம் அந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் போதே மனதில் நிற்கவில்லையே அதனால் தான் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார் இளையராஜா என்று அவருக்கு ஆதரவாகவும் இளையராஜா ரசிகர்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.
Comments