தேங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து சட்னி

 


தேங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து சட்னி செய்து இருக்கீங்களா?


இதுவரை தேங்காய் சட்னியை தனியாக அரைத்து இருப்போம், அதே போல தான் வேர்க்கடலை சட்னியும். ஆனால் இந்த பதிவில் வேர்க்கடலை, தேங்காய், பொட்டுக்கடலை என மூன்றும் சேர்த்து அரைக்கும் சட்னியை பற்றி தான் பார்க்க போகிறோம். 

 தோசை, இட்லி, உப்புமா, என எல்லா டிபன் வகைகளுக்கும் இந்த சட்னி பெஸ்ட் காமினேஷன். வாங்க இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பச்சை மிளாய், வெங்காயம், காய்ந்த மிளகாய் , கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு, எண்ணெய், புளி, உப்பு.

செய்முறை:

1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து வறுக்க வேண்டும்.

2. பின்பு அதனுடன் பச்சை மிளகாய், உப்பு, புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

3. இறுதியாக அதில் தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. இந்த கலவையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

 இந்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்து கலந்து பரிமாறினால் போதும் சூப்பரான டேஸ்டியான தேங்காய் - வேர்க்கடலை சட்னி தயார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,