யாழ் நூல் நிலையம்
வரலாற்றில் இன்று மே 31, 1981: ஆசியாவின் மிகப் பெரிய நூல் நிலையங்களில் ஒன்றாக விளங்கிய யாழ் நூல் நிலையம் சுமார் 70,000 நூல்களுடன் சிங்கள வெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டது யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின்ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது மே 31 1981 நள்ளிரவுக்குப் பின்னர் எரிக்கப்பட்டுச்சாம்பலானது. இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டு ப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசநாயக்கா உட்பட அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் பலரும் கூட அடங்கியிருந்தனர். தமிழ் மக்களின் பொக்கிஷமான நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் தாங்கவொண்ணா தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களின் தமிழ்த் தேசிய உணர்வுகளை மேலும் தூண்டி விட்டது.
Comments