போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை

 


போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை.. இப்படி ஒரு மோசடி நடக்கிறதாம்!
பணத்தை சேமிக்க போஸ்ட் ஆபீஸ் மிகச் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. எஃப்.டி மற்றும் ஆர்டி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்,பெண் குழந்தைகளுக்கான திட்டம் என 9 வகையான சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் பணத்தை சேமிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்க இந்த சேமித்து திட்டங்கள் பெரிது உதவுகின்றன.குறைந்தபட்ச அபாயத்துடன் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெறும் சேமிப்பு மட்டுமில்லை, வட்டி, வருமானம், வரிச்சலுகை என போஸ்ட் ஆபீஸில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதே நேரம் இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் பணத்தை சேமிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் இது. சேமிப்பதற்காக பெரிய தொகையை எடுத்து வைக்க முடியாது என்ற நிலையில் உள்ள முதலீட்டாளர்கள் கூட மாத வருமான திட்டம் போன்ற திட்டங்களில் சிறிய அளவிலான தொகையை கஷ்டப்பட்டு சேமித்து வருகிறார்கள். அவர்கள் பணத்திற்கு பாதுகாப்பு மிக மிக அவசியம். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்களை இந்திய தபால்துறை ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரித்துள்ளது.

அதாவது, சமீப காலமாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடி கும்பல் போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்களிடம் கைவரிசையை காட்டிவிட கூடாது என்பதில் தபால் துறை தெளிவாக உள்ளது. அதனால் தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. இந்திய தபால் துறை சில சர்வே, வினாடி வினா போட்டிகளை நடத்தி வருவதாகவும், அதன் மூலம் அரசாங்கம் மானியத் தொகை வழங்கி வருவதாகவும், சமூக வலைதளங்களிலும் வதந்திகள் பரவி வருகின்றன. சர்வே அடிப்படையில் இந்திய தபால் துறை மானியம், போனஸ் அல்லது பரிசுகளை வழங்குவதில்லை இதை நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளது.

அதே போல் தெரியாத நபர்களிடம் பிறந்த தேதி, அக்கவுண்ட் நம்பர், பாஸ்வோர்ட், ஓடிபி, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர்கள் விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, எஸ்பிஐ வங்கியும் இதேப்போன்ற எச்சரிக்கை செய்தியை தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,