முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் நாசர் தனது நன்றி

 கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது' வழங்கும் தேர்வு குழுவில் தன்னை உறுப்பினராக இடம்பெறச் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் நாசர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு 'கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதற்கான விருதுகளை தேர்வு செய்யும் குழுவின், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தலைவராகவும், நடிகர் நாசர் மற்றும் இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படவிருக்கின்றனர்.
இந்த தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படும் சாதனையாளருக்கு ரூ.10 லட்சம் பணமும், நினைவுப் பரிசும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதினை அரசியல் மட்டுமல்லாமல் கலைத்துறையிலும் மாபெரும் பங்காற்றிய கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். அதோடு ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் பிறந்தநாளன்றும் இவ்விருது வழங்கப்படவுள்ளது.
நன்றி: நியூஸ் 18 தமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,