தோனி புதிய சாதனை.. கோலியை தவிர யாரும் செய்யல

 தோனி புதிய சாதனை.. கோலியை தவிர யாரும் செய்யல


40 வயதான தோனி, டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்துள்ளார். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 5வது வீரராக களமிறங்கினார்.

எதிர்கொண்ட 2வது பந்திலேயே சிக்சர் விளாசிய தோனி, நோக்கியா வீசிய கடினமான பந்தில் பேட்டை வளைத்து டென்னிஸ் ஷாட் போல் நேராக சிக்சருக்கு அடித்தார்,

8 பந்துகளை எதிர்கொண்ட தோனி 21 ரன்களை விளாசினார். 40 வயதில் என்ன தல இப்படி வெறி கொண்டு ஆடுகிறார் என அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அறிவுசார்ந்த தோனி தோனி எப்போதுமே கிரிக்கெட்டில் அறிவுசார்ந்து விளையாடக் கூடியவர். உதாரணத்துக்கு 20வது ஓவரில் சிங்கிள்ஸ் எடுத்தால் தவறு என்று சொல்வார்கள். ஆனால் அடித்து ஆடி விக்கெட்டுகளை இழந்தால், அது டாட் பாலாகவும் மாறும், புதிய பேட்ஸ்மேனுக்கு நெருக்கடியும் தரும். டெல்லிக்கு எதிரான ஆட்டத்திலும் அப்படி தான் நடந்தது.

தோனி பிளான் பி லேக் கட்டர், ஸ்லோ கட்டர் என பந்துகளை நோக்கியா வீச, மொயின் அலி, உத்தப்பா ஆகியோர் அதனை அடித்து ஆடி ஆட்டமிழந்தனர். நோக்கியா பந்தை ஸ்லோவாகவும், யாக்கர் லெங்கித்திலும் வீசுகிறார் என தெரிந்ததும், தோனி விக்கெட்டை கொடுக்காமல் ரன்களை அடிக்க வேண்டும் என்று எண்ணினார்.
தோனி பாடம் கடைசி 2 பந்தில் தலா 2 டபுள்ஸ் ஓடினார் தோனி. இதில் 4 ரன்கள் சேர்ந்துவிட்டது. விக்கெட்டும் பறிபோகவில்லை. தோனியின் இந்த புத்திசாலித் தனத்தால் 5 ரன்கள் போய் இருக்க வேண்டிய ஓவரில் 9 ரன்கள் சென்றது. கிரிக்கெட்டில் இப்படி ஒரு ரன் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். நம்மால் ஒரு விசயம் செய்ய முடியவில்லை என்றால், பிளான் பி யான செய்ய முடிந்த காரியத்தை சிறப்பாக செய்வது என்ற பாடத்தை தோனியின் இந்த இன்னிங்ஸ் மூலம் கற்று கொள்ளலாம்.

தோனி சாதனை இந்த இன்னிங்ஸ் மூலம் டி20 போட்டியில் கேப்டனாக 6 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன் என்ற மைல்கல்லை தோனி எட்டினார். இதற்கு முன்பு விராட் கோலி மட்டும் தான் இத்தகைய மைல்கல்லை முதலில் எட்டினார். தோனி இப்படி உடல் தகுதியுடன் வேகமாக ஓடியும், பந்தை சிக்சருக்கும் பறக்கவிட்டால் 10 ஆயிரம் ரன்கள் கூட அவர் எடுக்கலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,