ராஜா ராம்மோகன்ராய்
ராஜா ராம்மோகன்ராய் பிறந்த நாளின்று, -
நவீன இந்தியாவின் முதல் பெருந்தலைவர் என்று ராஜாராம் மோகன்ராயை சொல்வது பொருத்தமாக இருக்கும். இவர்1772 இல் மே மாதம் 22ம் நாள் வங்கத்தில் பிறந்தார் ராஜாராம் மோகன் ராயின் அண்ணன் இறந்தபோது அண்ணனுடைய சிதையில் அவரது மனைவியையும் தள்ளினார்கள். அதைத் தடுக்க ராஜா ராம்மோகன்ராய் முயன்றபோது அவரை ஓர் அறையில் வைத்து பூட்டிவிட்டார்கள். அண்ணியின் ஓலக்குரல் அவர் செவிகளில் கேட்டுக்கொண்டே இருந்தது. அதுதான் உடன்கட்டை ஏறுவதைத் தடுக்க அவர் முயற்சி மேற்கொள்ள காரணமாய் அமைந்தது.பதினோரு ஆண்டுகள் சதிக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை அவர் தொடுத்தார். வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்க மொழிக்கு மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கினார். வில்லியம் பெண்டிங்க் காலத்தில் சதிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது ராஜா ராம்மோகன் ராயின் உழைப்பாலே நிகழ்ந்தது என்பதே உண்மை. இந்திய மக்களின் சமூக,அற மற்றும் பொருளாதார நிலையை முன்னேற்ற அவரின் ஓயாத உழைப்புகள்,உருவ வழிபாடு மற்றும் சதியை நீக்க அவரின் அக்கறை மிகுந்த முயற்சிகள் மற்றும் மனிதனின் நலத்தை மேம்படுத்துவற்றுக்காக வாதிட்ட ,ஓயாது அவரின் செயல்கள் இந்திய நாட்டு மக்களின் நினைவுகளில் நன்றியோடு நிறைந்திருக்கும்
Comments