குழந்தை உரிமை பாதுகாப்பு குழு(CRPF) மற்றும் இனிய உதயம் தொண்டு நிறுவனம்(IUCT) இணைந்து கோடைகால ஒருநாள் பயிற்சி வகுப்பு
கோடைகால ஒருநாள் பயிற்சி
இன்று (28.05.2022) செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை பகுதியில் குழந்தை உரிமை பாதுகாப்பு குழு(CRPF) மற்றும் இனிய உதயம் தொண்டு நிறுவனம்(IUCT) இணைந்து கோடைகால ஒருநாள் பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
இந்த கோடைக்கால ஒருநாள் பயிற்சி வகுப்பில் திருநீர்மலை குழந்தை உரிமை பாதுகாப்பு குழுவில் உள்ள 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த கோடைகால ஒருநாள் பயிற்சி முகாமில் முதல் நகர்வை இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் திரு. அல்லா பகேஷ் அவர்கள் குழந்தைகளுக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மற்றும் கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி பயிற்சி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு காகிதம் மூலம் அழகிய பொருட்களை செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி அளிப்பதற்காக ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனத்தை சார்ந்த லோகநாயகி, சுரேந்தர், திலீப் மற்றும் காஜோல் ஆகியவர்கள் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த கோடைகால ஒருநாள் பயிற்சி முகாமில் திருநீர்மலை குழந்தை உரிமை பாதுகாப்பு குழுக்களின் நிர்வாகிகள் பாஸ்டர் திரு எஸ் பி ராஜ், திருமதி இராணி மேரி மற்றும் ஜீவகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா சிவக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த கோடைகால ஒரு நாள் பயிற்சி வகுப்பில் நடப்பதற்கு இடம் அளித்த பாஸ்டர் பேதர் அவர்களுக்கு திருநீர்மலை குழந்தை உரிமை பாதுகாப்பு குழுக்களின் சார்பாகவும் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்வில் குழந்தைகள் அனைவரும் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் தங்களின் உள்ஆற்றல் திறமைகளை (INNER TALENT) செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தினர். பயிற்சியாளர்கள் கற்றுக் கொடுத்ததை மிக அழகாகவும் அருமையாகவும் நேர்த்தியாகவும் செய்து காட்டினர். கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது. குழந்தைகள் அனைவரும் இந்த பயிற்சியில் பல விஷயங்கள் கற்றுக் கொண்டோம் என்ற மகிழ்ச்சியில் வீட்டுக்கு சென்றனர்.
தகவல் பகிர்வு
அல்லாபக்ஷ
Comments