Evidence Act - sec 3

 Evidence Act - sec 3



#கண்காணிப்பு கேமராவில் இருந்து பெறப்படும் படங்கள் மற்றும் Hard Disc, Compact Disc, Pen Drive ஆகியவற்றிலிருந்து பெறப்படும் தகவல்கள் சாட்சிய சட்டம் பிரிவு 3ன் கீழ் ஆவணமாக கருதப்படும். விசாரணை நீதிமன்றத்திற்கு கண்காணிப்பு கேமராவில் உள்ள படங்களை பார்த்து எதிரியின் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும் அதிகாரம் உண்டு. அவ்வாறு பெறப்படும் தகவல்களை முதல்நிலை சாட்சியமாகவோ அல்லது இரண்டாம் நிலை சாட்சியமாகவோ இருந்தால் கூட அதை பார்க்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. நீதித்துறை நடுவர் மின்னணு பதிவு ஆவணத்தை சாட்சியாக பெறும் போது அதை பார்த்து விட்டு அந்த பதிவை CD யிலோ அல்லது Pen Drive விலோ பதிவேற்றம் செய்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரு வழக்கு அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்க வேண்டிய வழக்காக இருக்கும் போது நீதித்துறை நடுவர் பதிவேற்றம் செய்த ஒளிப்பதிவுகளை அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். விசாரணை நீதிமன்றம் கண்காணிப்பு கேமராவில் இருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்ட படங்கள் குறித்து எதிரியிடம் Crpc sec 313ன் கீழ் கேள்வி எழுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. 


K. Ramajayam @Appu 

         Vs 

The Inspector of Police

(2016-1-MWN-CRI-408-DB)




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,