Google Pay ஒரு முக்கியமான feature பற்றி

 Google Pay ஒரு முக்கியமான feature பற்றி தெரிஞ்சுப்போம், அநேகமா எல்லாருக்கும் இது தெரிந்துருக்கலாம் தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.அது என்ன அப்டினு பார்த்தோம்னா.


நண்பர்களோட நீங்க எங்கயாவது வெளிய போறீங்க அப்டினு வைங்க உதாரணமாக ஒரு Treat அப்படினு எடுத்து
கொள்வோம் அல்லது சாதாரணமா Weekendல சாப்புட போறீங்க அப்டினு எடுத்துக்கோங்க,அப்ப எல்லாரும் நல்ல தமக்கு விரும்பியதை சாப்பிட்ட பிறகு Bill வரும் எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டதுனால எல்லாரும் Share பண்ணி பில் கொடுப்பாங்க. இப்ப பில் Amount ஒரு 1000 வருது அப்டினு வைங்க 5 பேர் போறிங்க ஆளுக்கு 200 குடுக்கணும் முன்னெல்லாம் Purseல இருந்து எடுத்து கொடுப்பிங்க இப்ப இருக்குற நேரத்துல எல்லாரும் அதிகம் UPI Payment தான் அதுவும் Google Payல Send பண்றேன் அப்டினு சொல்லுவீங்க.அப்ப அங்க இருக்க ஒரு நண்பர் சொல்லுவாரு மச்சான் நீ மொத்தமா பணம் கொடுத்துரு நாங்க அப்பறம் அனுப்பிறோமஅப்டினு அவரும் உங்களை நம்பி கொடுத்துருவாரு அப்பறம் எல்லாரும் வரேன் மாப்ள அப்டினு போயிருவாங்க அப்பறம் அந்த பணத்தை நீங்க வாங்கறதுக்குள்ள படுறபாடு இருக்கே, இது எல்லாரோட நண்பர்கள் Groupல சாதாரணமாக நடக்குற நிகழ்வு. தினமும் யாராவது ஒரு ஆள் பலியாடு ஆகுறதை தடுக்குறது எல்லாரும் ஒரேநேரத்துல கூகிள் Pay மூலமாகவே பணம் எப்படி அனுப்பறது அப்டினு பார்ப்போம், மேல சொன்னது போலவே Bill amount 1000 ரூபாய் அப்டினு வைங்க இதுல எப்படி எல்லாரும் ஒரே நேரத்துல பணம் அனுப்புறது Google Pay கொண்டு தெரிஞ்சுப்போம். உங்களோட Google Pay Open பண்ணுங்க அதுல மேல Search Bar இருக்கும்பார்த்திங்களா அதை Click பண்ணுங்க அதன் பிறகு கீழ Split Bill அப்டினு ஒரு Options இருக்கும் அதை Select பண்ணி உங்க நண்பர்களை அதுல Add பண்ணுங்க பிறகு அடுத்து உங்க Bill Amount Add பண்ணுங்க பிறகு உங்களோட நண்பர்களோட எண்ணிக்கைக்கு ஏற்ப Amount Enter பண்ணி அவங்களுக்கு ஒரு Send Requestகொடுங்க அவ்ளோதான், எல்லாருக்கும் Amount போகிரும் அவங்களும் Send பண்ணிருவாங்க யாரும் இன்னும் Send பண்னலா கூட அவங்களுக்கு நாம மீண்டும் Request கொடுக்க முடியும். இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள கீழ உள்ள இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,