உதயதாரகை (Morning Star) ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகை

 உதயதாரகை (Morning Star) ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையும், யாழ்ப்பாணத்தின் முதலாவது செய்திப் பத்திரிகையும் ஆகும்.

. இது அமெரிக்க இலங்கை மிசன் மூலம் வெளியிடப்பட்டது. இதன் முதலாவது இதழ் 1841 சனவரி 7 இல் வெளிவந்தது.


 இப் பத்திரிகை தமிழில் உதயதாரகை என்றும் ஆங்கிலத்தில் Morning Star என்றும் இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒரு முறை தெல்லிப்பழையில் அச்சிட்டு வெளிவந்தது.841-ல் இலங்கையில் ஜாஃப்னா வட்க்கு மாவட்டத்தில் மானிப்பாய் ஊரில் இருந்த அமெரிக்கன் மிஷனில் பணியாற்றிய ஹென்றி மார்ட்டின் (Henry Martin), செத் பேய்சன் (Seth Payson) என்னும் கிறிஸ்தவ போதகர்களால் தொடங்கப்பட்டது

 இவ்விதழ். மானிப்பாயைச் சேர்ந்த நேத்தன் ஸ்ட்ரோங் என்ற அம்பலவாணர் சிற்றம்பலம் இதன் ஆசிரியர்.தெல்லிப்பழையில் அச்சிடப்பட்டு வெளிவந்தது.தொடங்கியபோது இது மாதமிருமுறை செய்தியிதழாக இருந்தது. 1856 முதல் வாரம் தோறும் வெளிவரத்தொடங்கியது. கரோல் விசுவநாதபிள்ளை, ஆணல்ட் சதாசிவம் பிள்ளை ஆகியோரும் உதயதாரகையில் ஆசிரியராகப் பணிபுரிந்தனர். வட்டுக்கோட்டை குருமடம் இவ்விதழின் பின்னணியில் இருந்தது.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,