N T ராமராவ் பிறந்த நாள்.
இன்று பிரபல திரைப்பட நடிகரும் ஆந்திர மாநில முதலமைச்சராக விளங்கியவருமான திரு N T ராமராவ் பிறந்த நாள். என்.டி.ராமாராவ் 1923ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி ஆந்திர மாநிலம் நிம்மகுரு என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் நன்டமுரி தாரக ராமாராவ்.
இவர் 1949ஆம் ஆண்டு மன தேசம் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். 1951ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாதாள பைரவி’ திரைப்படம் இவருக்கு அபார வெற்றியை பெற்று தந்தது. 1968ஆம் ஆண்டு தேசிய விருதையும், பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார்.
பிறகு, திரையுலகிலிருந்து ஓய்வு பெற்று தீவிர அரசியலில் ஈடுபட்ட இவர் 1983-1995ஆம் ஆண்டுகளுக்கு இடையே 3 முறை ஆந்திர மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார். (1928). ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு இவரது மருமகன் ஆவார் !
Comments