சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) பிறந்த தினம்

 மே 30,



நவீனத் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரும், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், விமர்சகர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) பிறந்த தினம் இன்று.

# நாகர்கோவில் அருகே உள்ள தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார் (1931). பள்ளிக் கல்வி கேரளத்தில் பயின்றவர் பாட மொழி மலையாளத்தில் இருந்தாலும் தமிழ் மொழி மீதான ஆர்வம் காரணமாக பல்வேறு தமிழ் இலக்கியங்களை கற்றார்

. 21 வயதில் தமிழில் கதை எழுத ஆரம்பித்துவிட்டார்.

# இவரது ஆரம்பகாலக் கதைகள் தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராக இருந்த ‘சாந்தி’ இதழில் வெளிவந்தன. தகழி சிவசங்கரப் பிள்ளையின் ‘தோட்டியின் மகன்’ என்ற மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். பிறகு அவருடைய ‘செம்மீன்’ நாவலையும் மொழிபெயர்த்தார்.

# எழுத்து என்ற சிறு பத்திரிகையில் இவரது முதல் கவிதை வெளி வந்தது. பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 1975-ல் ‘நடுநிசி நாய்கள்’ மற்றும் 1987-ல் ‘யாரோ ஒருவனுக்காக’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், 1995-ல் அனைத்துக் கவிதை களும் அடங்கிய ‘107 கவிதைகள்’ என்ற நூலும் வெளிவந்தன.

# முதலில் முற்போக்கு யதார்த்தவாத கதைகளையும் பின்னர் அதிலிருந்து மாறுபட்ட கதைகளையும் எழுதினார். 50களின் இறுதியில் எழுத ஆரம்பித்த ‘ஒரு புளிய மரத்தின் கதை’ நாவலை 1966-ல் எழுதி முடித்தார்.

.1981-ல் இவர் எழுதிய ஜே.ஜே. சில குறிப்புகள் இன்றளவும் அதிகம் விவாதிக்கப்படும் நாவலாக இருக்கிறது.

# இவரது கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள், அஞ்சலிக் கட்டுரை கள், முன்னுரைகள், மதிப்புரைகள், பத்தி எழுத்து எனப் பலதரப்பட் டவை. இவரது கூர்மையான விமர்சனங்கள் தமிழ்ச் சூழலின் இலக்கிய அளவுகோல்களைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.குமரன் ஆசான் நினைவு விருது, இயல் விருது, கதா சூடாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழின் நவீனத்துவ இயக்கத்தை வலுப்படுத்தியவர்களுள் ஒருவர் என்று போற்றப்பட்ட சுந்தர ராமசாமி, 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 74ஆவது வயதில் காலமானார்.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,