நீலம் சஞ்சீவி ரெட்டி நினைவு நாள்
ஜூன் 1 விடுதலைப்போராட்ட வீரரும் முன்னாள் குடியரசு தலைவரும் ஆன நீலம் சஞ்சீவி ரெட்டி நினைவு நாள் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், 1913 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் என்ற மாவட்டதிலுள்ள இல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தார் தன்னுடைய கல்வியைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபத்திக் கொண்டார்
1940 முதல் 1945 வரை, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பெரும்பாலான காலங்களை சிறையிலேயே காலத்தை கழித்த அவர், சிறையில் ஸ்ரீ பிரகாசம், ஸ்ரீ சத்திய மூர்த்தி, ஸ்ரீ காமராஜர், ஸ்ரீ கிரி போன்ற தலைவர்களை சந்தித்தார்.
விடுதலைக்கு பிறகு, நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் 1946ல் சென்னை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட பின், 1947ல் செயலாளராகவும் பொறுப்பேற்றார். அதே ஆண்டில், இந்திய சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்தெடுக்கப்பட்டார், 1956ல் உருவான ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சராக நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் தேர்தெடுக்கப்பட்டார். மார்ச் 1977 ஆம் ஆண்டு ஜெயபிரகாஷ் அவர்களின் ஆதரவுடன் ஒரு ஜனதா கட்சி வேட்பாளராக “நன்டியால்” தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார் 1977 ஆம் ஆண்டு நடந்த குடியரசு தேர்தலில் போட்டியின்றி ஒரு மனதாக இந்தியாவின் ஆறாவது குடியரசு தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். 1977 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை இந்திய குடியரசு தலைவராக பணியாற்றிய நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், தன்னுடைய பதவி காலம் முடிந்த பிறகு, அவருடைய சொந்த கிராமமான இல்லூரில் இறுதி காலத்தை கழித்தார். அவர் ஓய்வு நேரங்களில் விவசாயத்தில் ஈடுபட்டார். கடைசி காலம் வரை அயராமல் பாடுபட்ட நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், ஜூன் 01, 1996 ஆம் ஆண்டு தன்னுடைய 83 வது வயதில் பெங்களூரில் காலமானார்.
Comments