உலக பால் தினம் இன்று.

 ஜூன் 1, 

உலக பால் தினம் இன்று.


பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐநா சபையால் ’உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம் பால். தினசரி காலையில் காபியில் தொடங்குவது, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் எனப் பால் பொருள்கள் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இத்தகைய சிறப்பும், சத்தும் நிறைந்த பால், ஐநா சபையால் உலக உணவாக அங்கீகரிக்கப்பட்டது. இதை உலகுக்கு உணர்த்த ஐநா சபை ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென அறிவுறுத்தியது. இதன்படி 2001-ஆம் ஆண்டிலிருந்து ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

பால் மற்றும் பால் பொருள்களின் சிறப்பு அம்சங்களை உலகுக்கு எடுத்துக்கூறும் விதமாக இத்தினத்தைக் கொண்டாட வேண்டுமென ஐநா சபை வலியுறுத்தியுள்ளது. பசும்பாலில் அனைத்துவித அமினோ அமிலங்களும் உள்ளன. 5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும் 400 மி.லி பால் சாப்பிடுவது நல்லது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் உட்கொள்வது சிறந்தது. இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,