கார்ல் லேண்ட்ஸ்டெய்னர்

 ஜூன் 14, ரத்தப் பிரிவுகளை வகைப்படுத்தி, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரிய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner) பிறந்த தினம் இன்று. கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 1868-ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தவர்





பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று, பட்டம் பெற்றார். இறுதியாண்டு பயிலும் போதே உயிரி ரசாயன ஆராய்ச்சியைத் தொடங்கினார். ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி வெளியிட்டார். வேதியியல் குறித்து மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள சோதனைக் கூடங்களில் 5 ஆண்டுகாலம் பணியாற்றினார். வெவ்வேறு நபர்களின் ரத்தத்தைக் கலக்கும்போது அவற்றில் வேறுபாடுகள் இருப்பதை 1901-ல் கண்டார். இதுகுறித்து மேலும் ஆராய்ந்ததில் ஏ, பி, ஓ ஆகிய ரத்த வகைகள் இருப்பதையும் முதன்முதலாகக் கண்டறிந்தார். 1927-ல் மேலும் பல புதிய வகை ரத்தப் பிரிவுகளைக் கண்டறிந்தார். ஒரே வகை ரத்த பிரிவை கொண்ட மனிதர்கள்  இடையே ரத்த தானம் செய்ய முடியும் என்பதனையும் அவர் கண்டுபிடித்த்த்தார். அவர் மேற்கொண்ட  சோதனை முயற்சிகள் வெற்றியடைந்தபின் 1907-ஆம் ஆண்டு முதன் முதலாக நியூயார்க்கின் மௌண்ட் சினாய் மருத்துவமனையில் ரத்த தானம் நடைபெற்றது இந்த ஆராய்ச்சிக்காக 1930-ல் இவருக்கு அலெக்சாண்டர் எஸ்.வெய்னருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருடைய பிறந்த நாளே ரத்த தானம் செய்வோர் நாளாக கொண்டாடப்படுகிறது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,