உலக குருதிக் கொடையாளர் நாள்
இன்று ஜூன் 14 - உலக குருதிக் கொடையாளர் நாள் அறிவியல் வளர்ச்சியால் பல்வேறு சாதனைகளைப் படைத்த மனிதனால் இன்று வரை செயற்கையாக குருதியை உருவாக்க முடியவில்லை. அதனால் இதை, ஒருவர் உடலில் இருந்து எடுத்து மற்றவர்களுக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இங்குதான் குருதிக் கொடை முக்கியத்துவம் பெறுகிறது. குருதிக் கொடை வழங்கும் ஒவ்வொரு வரும் கதாநாயகன்தான் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. குருதிக் கொடை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குருதிக் கொடை அளிப்போரை கவுரவிக்கும் வகையிலும் உலக சுகாதார நிறுவனம் கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி முதல் உலக குருதிக் கொடையாளர் தினத்தை அறிவித்து, ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மூலம் ரத்தத்தை சேகரிப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.
Comments