மணிவண்ணன் நினைவுநாள்

 இன்று தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆன திரு    மணிவண்ணன் நினைவுநாள்  ஜூன் 15, 2013. இவர்  400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் மணிவண்ணன். இவரின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார், சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.

இவருடைய  50-வது திரைப்படமான ‘அமைதிப்படை என்ற திரைப்படம் மற்றும் அதிலுள்ள அரசியல் பின்னணி இப்போதும் திரைப்பட ரசிகர்களால் பேசப்படக் கூடியதாகும்.

சிறு அகவையிலிருந்தே அரசியல் பின்னணியில் வளர்ந்த மணிவண்ணன் நக்சலைட்டுகளின் தலைவராக இருந்த சாரு மஜும்தாரைச் சந்தித்தவர். நாத்திகம் மற்றும் திராவிடக் கொள்கையில் பிடிப்புள்ள மணிவண்ணன் தனியீழப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்தவர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலும் நாம் தமிழர் கட்சியிலும் பணியாற்றியவர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,