ஜூன் 16ம் தேதி சர்வதேச ஆப்பிரிக்க குழந்தைகள் தினம்

 
இன்று ஜூன் 16ம் தேதி சர்வதேச ஆப்பிரிக்க குழந்தைகள் தினம் அனுசரிக்கப் படுகிறது. 1976ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஜொஹேனஸ்பர்க் நகரின் புறநகர் பகுதியான சொவேட்டோ வில் ஆயிரக்கணக்கான கருப்பு இன பள்ளி மாணவ மாணவிகள் தங்களுக்கு முறையான கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென கோஷம் எழுப்பி பேரணியாக சென்றபோது அடக்குமுறை வெள்ளை இன அரசு அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியது. இக்கொடூர துப்பாக்கிச்சூட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் மாணவர்கள் உயிரிழந்தனர். வெள்ளை அரசின் இகொடுமையை எதிர்த்து தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா முழுவதும் கறுப்பு இன மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் பல நூறு மக்கள் உயிர் தியாகம் செய்தனர். தங்களுக்கு நியாயமான கல்வி அளிக்கப் படவெண்டுமெனக் கோரி போராட்டம் நடத்தி உயிர் தியாகம் செய்த தென் ஆப்பிரிக்க பள்ளிக் குழந்தைகள் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16ம் தேதியில் ஆப்பிரிக்க குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,