பாஸ்கரா-1
ஜூன் 7, 1979
வரலாற்றில் இன்று. இந்தியாவின்
பாஸ்கரா-1 செயற்கைக்கோள் சோவியத் யூனியனில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட தினம் இன்று. சோவியத் ஒன்றியத்தின் கபுசுடின் யார் தளத்தில் இருந்து இத்தொலையுணர்வு செயற்கைக்கோள் விண்ணிற்குச் செலுத்தப்பட்டது.
இது இந்தியா விண்வெளியில் செலுத்திய இரண்டாவது செயற்கைக் கோளாகும். இந்திய விண்வெளி ஆய்வு மையம் ISRO உருவாக்கிய இச்செயற்கைக்கோள் பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட ஒரு புவி ஆய்வு செயற்கைக்கோளாகும். தொலையளவியல், நீரியல் மற்றும் கடலியல் தொடர்பான தரவுகளை இச்செயற்கைக்கோள் திரட்டியது. தொடர்ந்து ஒருவருடம் பத்து மாதங்கள் பூமியை வலம் வந்த பாஸ்கரா-1, விண்வெளி ஆராய்ச்சிக்குத் தேவையான பல புகைப்படங்களை ஐதராபாத்திலுள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்பி வந்தது.
Comments