விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையம் திறக்கப்பட்ட நாள்
வரலாற்றில் இன்று - மும்பை நகரின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்று விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையம் திறக்கப்பட்ட நாள் இன்று (ஜூன் 20 1887) பிரிட்டன் மகராணி விக்டோரியா முடி சூட்டப்பட்ட நாளன்று திறக்கப்பட்டதால் அவரது பெயர் இந்த ரயில் நிலையத்துக்கு இடப்பட்டது. 1996 மார்ச் மாதம் முதல் சத்ரபதி சிவாஜி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. தற்போதும் கூட இதனை வி. டி. ஸ்டேஷன் என்றே பெரும்பாலானோர் ஆழைக்கின்றனர். இந்த ரயில் நிலையத்தின் சுற்றுப்புறப் பகுதிகளிலும், நடைபாதைகளிலும், சுரங்க வழிப்பாதைகளிலும் எண்ணற்ற எலெக்டிரானிக் பொருட்கள், கணினி சந்தைகள், ஆடை வகைகள் போன்றவை இளைஞர்களால் விற்பனை செய்யப்படும் காட்சிகளை நீங்கள் பார்க்கலாம்.
. உலகின் பெருமை மிகு பாரம்பரிய கட்டிடங்களில் இது 7ம் இடத்தை பெற்றுள்ளது. 2008ம் ஆண்டு பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற அஜ்மல் காசாப் உள்ளிட்ட 12 பயங்கரவாதிகள் மும்பை நகரில் ஊடுருவி முதலில் தாக்கியது இந்த ரயில் நிலையத்தில்தான் அந்த கொடூர தாக்குதலில் 58 பேர் உயிர் இழந்தனர். 104 பேர் படுகாயமுற்றனர். அக்காட்சிகள் இங்குள்ள கண்காணிப்பு கேமராவில் படம் பிடிக்கப்பட்டு அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டன.
Comments