ஜூன் 22, 1992 -வாச்சாத்தி வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட நாள்

 
வரலாற்றில் இன்று - ஜூன் 22, 1992 -வாச்சாத்தி வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட நாள் தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராம மக்கள் சந்தனமரக் கடத்தலில் ஈடுபடுவதாகவும், ஆற்றுப் படுகையில் சந்தனக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறிக்கொண்டு, 1992 ஜூன் பத்தாம் நாள் வாச்சாத்தி பழங்குடி கிராமத்திற்கு நூற்றுக்கணக்கில் வந்திறங்கினர், போலீஸ் , வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் ஊழியர்களும். காட்டுமிராண்டித்தனமாகப் பாய்ந்து, 13 வயது பள்ளிச் சிறுமி உட்பட 18 இளம்பெண்களை நிர்வாணப்படுத்திக் கும்பல் பாலியல் வன்முறை செய்தார்கள். ஆண்களில் பலர் உயிருக்கு அஞ்சி காடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொள்ள, கையில் சிக்கியவர்களையும் பெண்களையும் அடித்து நொறுக்கினார்கள். ஆடு, மாடு, கோழிகள் உட்பட அவர்களின் உடமைகளைக் கொள்ளையடித்ததோடு, உணவு தானியங்களைத் தீ வைத்துக் கொளுத்தியும், குடிநீர்க் கிணற்றில் மண்ணெண்ணெயைக் கொட்டியும் காவல் துறையினர் நாசப்படுத்தினர்.

வாச்சாத்தி வன்முறைகள் வழக்கில் சி.பி.ஐ உட்பட பல்வேறு விசாரணைகளுக்குப்பிறகு மொத்தம் உள்ள 269 குற்றவாளிகளில் உயிரோடு உள்ள 215 பேரும் குற்றவாளிகள் எனத் (2011 செப்டெம்பர் 29) தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பலாத்காரம் செய்ததாக 17 வனத்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. 17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவலும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது\பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தின் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக 19 நீண்ட வருடங்கள் பொறுமையாகவும், மன உறுதியோடும் போராடிய கம்யூனிஸ்ட் பிரமுகர்களும், பழங்குடி அமைப்பின் பிரமுகர்களும், நியாயத்துக் காக வாதாடிய வழக்கறிஞர்களும், நல்ல தீர்ப்பு தந்த நீதிபதிகளும், இவர் களையெல்லாம்விட பாதிக்கப்பட்ட பெண்களை மணந்து, வாழ்வு தந்த பெயர் தெரியாத அந்த வாச்சாத்தி

 இளைஞர்களும்தான் நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள்!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்