கமால் அப்துல் நாசர்
வரலாற்றில் இன்று ஜூன் 23ம் நாள் 1956 ஜமால் அப்துல் நாசிர் ஹுசைன் என்னும் முழுப் பெயர் கொண்ட கமால் அப்துல் நாசர் (Gamal Abdel Nasser) எகிப்தின் இரண்டாவது சனாதிபதியாக பதவி ஏற்றார்.
நாசிர் தற்கால அராபிய வரலாற்றிலும், 20 ஆம் நூற்றாண்டில் அரசியலிலும் ஒரு முக்கியமான தலைவராகக் கருதப்பட்டார். இவரது தலைமையின் கீழ் எகிப்து சூயஸ் கால்வாயை நாட்டுடைமை ஆக்கியதுடன், அரபு உலகிலும், ஆப்பிரிக்காவிலும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கியமான பங்களிப்பையும் செய்தது. சூயஸ் நெருக்கடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது அரபு உலகம் முழுவதிலும் நாசிர் ஒரு வீரராகக் கருதப்பட்டார். இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் சேர்ந்து அனத்துலக அணிசேரா இயக்கத்தைத் தொடங்குவதில் நாசிரின் பங்கு முக்கியமானது.
Comments