சஞ்சய் காந்தி

 வரலாற்றில் இன்று - ஜூன் 23, 1980, சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார் சஞ்சய் காந்தி... முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி,  ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன். இவர், பா.ஜ.க அரசியல்வாதிகளான மேனகா காந்தியின் கணவரும் வருண் காந்தியின் தந்தையும் ஆவார். அரசியலில் எவ்வித பதவியும் வகிக்காமலேயே அசுர வளர்ச்சியடைந்தவர். இவரது அண்ணன் ராஜீவ் காந்தி எந்தளவுக்கு அமைதியானவரோ அதற்கு நேரெதிர் சஞ்சய் காந்தி! தடாலடிப்பார்ட்டி என்றும் அடாவடிப்பார்ட்டி என்றும் பெயர் வாங்கியவர் இந்திராகாந்தி 1975ல் எமெர்ஜென்சி பிரகடனம் செய்தபோது இந்திராகாந்திக்கு முழுக்க முழுக்க ஆலோசகராக செயல்பட்டவர் சஞ்சய் காந்திதான். அப்போது நாடு முழுவதும் இந்தியாவை ஆள்வது பிரதமர் அலுவலகம் அல்ல... பிரதமரின் வீடுதான் என்றுகூட ஒரு விமர்சனம்  உண்டு. சஞ்சய் காந்தி தடாலடிக்கு பேர் போனவராய் விளங்கி இந்திராவின் அரசாங்கத்தையே தனது கைக்குள் வைத்திருந்தார் என்று எதிர்கட்சிகள் புகார் கூறின சஞ்சய் காந்தி ஜீன்-23,1980ல் டெல்லியில் டெல்லி ஃபிளையிங் கிளப்பைச் சேர்ந்த ஒரு புது ரக விமானத்தை இயக்கிப் பறந்தபோது விபத்துக்குள்ளாகி இறந்திருக்கிறார். அவருடன் இறந்த அந்த விமானத்தில் இருந்த மற்றொரு நபர் பயிற்சியாளர் கேப்டன் சுபாஷ் சக்சேனா.





Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,