பிளாசிப்போர் நிகழ்ந்த தினம் இன்று.

 ஜூன் 23, வரலாற்றில் இன்று.




பிளாசிப்போர் நிகழ்ந்த தினம் இன்று.

ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கும், வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்தவுலா தலைமையிலான வங்களாப் படையினருக்கும்.

1757ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று பிளாசி எனும் இடத்தில் யுத்தம் நடந்தது.

போருக்கு காரணமான நிகழ்வாக, சிராஜ் உத்தவுலா ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையை தாக்கினார்.

ஆங்கிலேயக் கைதிகளை இருட்டறையில் வைத்து சிறைப்படுத்தியதில் பலர் இறந்தனர். இதன் எதிரொலியாக பிளாசிப்போர் நடைபெற்றது.

வங்காளத்தின் பெரும் படையை எதிர்த்து வெற்றிபெற முடியாது என்பதை அறிந்த ராபர்ட் கிளைவ், வங்காளத்தின் தளபதி மிர் ஜாபருக்கு பதவி ஆசையைக் காட்டி யுத்தத்தில் பங்கேற்காமல் இருக்கச் செய்தார்.

இதனால் ஆங்கிலேயப் படைகள் பிளாசிப் யுத்தத்தில் வென்றன

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி