கர்நாடக இசைமேதை மகாராஜபுரம் சந்தானம் நினைவு நாள் இன்று
ஜூன் 24,
கர்நாடக இசைமேதை மகாராஜபுரம் சந்தானம் நினைவு நாள் இன்று (1992).
1928ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் பிறந்த அவர் இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த சங்கீத மேதைகளில் ஒருவராகப் போற்றப்படுவதோடு , இசைத்துறைக்கு அவராற்றிய சேவை இன்றும் நினைவுகூரப்படுகிறது!
யாழ்ப்பாணத்தில் இராமநாதன் இசைக் கழகத்தின் (தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைக் கல்லூரி) முதல்வராக பணிபுரிந்து பின்னர், சென்னையில் வாழ்ந்து வந்தார். இவர் பல்வேறு பாடல்களையும் இயற்றியுள்ளார். 1989இல் Madras Music Academy அவருக்கு சங்கீதக் கலாநிதி
பட்டமளித்து கௌரவித்தது.
மகாராஜபுரம் சந்தானம் 1992 ஜூன் 24 இல் வாகன விபத்தில் காலமானார். இவரைத் தொடர்ந்து இவரது மகன்கள் மகாராஜபுரம் எஸ். ஸ்ரீநிவாசன் மற்றும் மகாராஜபுரம் எஸ். ராமச்சந்திரன், இவரது முதன்மை மாணவர் ஆர். கணேஷ் ஆகியோர் இவரது இசை பாணியைத் தொடர்ந்து வருகின்றனர்.
இவரின் நினைவாக சென்னை தியாகராய நகரில் உள்ள கிரிபித் சாலை, "மகாராஜபுரம் சந்தானம் சாலை" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மிகப் பிரபலமான கிருஷ்ண கான சபாவும், முப்பாத்தம்மன் கோவிலும் இந்த சாலையில் உள்ளன.
Comments