ஜூன் 25, 1983 - கிரிக்கெட் உலக கோப்பை
வரலாற்றில் இன்று ஜூன் 25, 1983 - கிரிக்கெட் உலக கோப்பையை இந்திய அணி வென்றது
இந்த போட்டியில் இந்திய அணி ஆல்-ரவுண்டர் கபில்தேவ் தலைமையில் களம் கண்டது. இந்திய அணியில் ஸ்ரீகாந்த், சுனில் கவாஸ்கர், மொகிந்தர் அமர்நாத், கீர்த்தி ஆசாத், ரோஜர் பின்னி, சையது கிர்மானி, மதன்லால், சந்தீப் பட்டில், பல்விந்தர் சந்து, யஷ்பால் ஷர்மா, ரவிசாஸ்திரி, சுனில் வல்சன், வெங்சர்க்கார் ஆகியோர் இடம் பிடித்து இருந்தனர். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் சந்தித்தன இந்திய அணி 54.4 ஓவர்களில் 183 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் 38 ரன்கள் எடுத்தார்.. குறைந்த எண்ணிக்கையிலான இலக்கு என்றபோதிலும் வெஸ்ட்இண்டீஸ் அணி 52 ஓவர்களில் 140 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறையாக உலக கோப்பையை தன்வசமாக்கியது. இந்திய அணி தரப்பில் மொகிந்தர் அமர்நாத், மதன்லால் தலா 3 விக்கெட்டும், பல்விந்தர் சந்து 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்திய வீரர் மொகிந்தர் அமர்நாத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
Comments