தெலுங்கானா என்னும் தனி மாநிலம்
வரலாற்றில் இன்று- தனி மாநிலம் கோரி தெலுங்கானா பகுதி மக்களின் 40 ஆண்டுகால போராட்டத்தை அடுத்து ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானாவை தனி மாநிலமாக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்தது. இதற்கான சட்டம் பாராளுமன்றத்திலும் இயற்றப்பட்டது. இதன் மீது ஜனாதிபதி கையெழுத்திட்டதை தொடர்ந்து தெலுங்கானா என்னும் புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது.
இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் நகரம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதன்படி 2014 ஜூன் 2 ம் தேதி முதல் சட்டபூர்வமாக தெலுங்கானா என்னும் தனி மாநிலம் உருவானது.
கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில் தக்காணத்தில் அமைந்துள்ள இந்த தெலுங்கானா மாநிலத்தில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் மாவட்டங்களான வாரங்கல், அதிலாபாத், கம்மம், மகபூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிசாமாபாத்,மேதக் ஆகியனவும் மாநிலத் தலைநகர் ஐதராபாத்தும் அடங்கும். தெலுங்கானா மாநிலத்தில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன.
Comments