ராகுல் காந்தியின் 52-வது பிறந்தநாள்.
இன்று ஜூன் 19 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 52-வது பிறந்தநாள். (1970) இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் ஆவார் இவர் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். ர் கேரளா மாநிலம் வயநாடு தொகுதி பிரதிநிதி ஆவார். பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் விவாதங்களில் முக்கிய பங்காற்றி வருகிறார். பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் பிரச்சினைகளுக்காக துணிச்சலுடன் குரல் கொடுத்து வாதாடக் கூடியவர் இவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி தம்பதியரின் மகன் ஆவர் காங்கிரஸ் கட்சி 2009-ம் ஆண்டு பாரளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்காக ராகுல் காந்தி பரவலாக புகழப்பட்டார். அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோனியம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினைக் கொண்டுவர முயற்சி என இவரது பணிகள். தொடர்கின்றன இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமரும் வாய்ப்பினை மறுத்துவிட்டு அடித்தளம் வரை கட்சியினை பலப்படுத்தும் பணியினை மேற்கொண்டார். 2019 ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், அதற்கு பொறுப்பேற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். பாராளுமன்றத்திலும் வெளியேயும் நரேந்திர மோடி அரசின் ஊழல்களையும் பித்தலாட்டங்களையும் துணிச்சலாக தட்டிக் கேட்கிறார். செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். இவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று கோரிக்கை அக்கட்சிக்குள் வலுத்து வருகிறது இன்று இவருடைய பிறந்த நாளை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் கொரோனா நிவாரண நாளாக அனுசரிக்குமாறு கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார்
Comments