மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் உலக சாதனை படைத்துள்ளது.

 மும்பை அணி ரன்கள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. 
, 87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4 கால்இறுதி ஆட்டங்கள் (5 நாள் ஆட்டம்) பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை அணி, உத்தரகாண்டை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முதல் இன்னிங்சில் 166.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 647 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. சுவேத் பார்கர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அதை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய உத்தரகாண்ட் அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்க்ஸை தொடங்கிய மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்து மீண்டும் 'டிக்ளேர்' செய்தது. 795 ரன்கள் என்ற மிக இமாலய இலக்குடன் உத்தரகாண்ட் அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி இன்று 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி (ரன்கள் அடிப்படையில் ) என்ற உலக சாதனையை மும்பை அணி படைத்துள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,