இளையராஜாவின் 80 ஆவது பிறந்த நாள்
ஜூன் 2 - இசைஞானி என்று போற்றப்படும் இளையராஜாவின் 80 ஆவது பிறந்த நாள் இன்று இந்திப் பாடல்களை விரும்பி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ்நாட்டு ரசிகர்களை இனி தமிழ்ப் பாடல்கள்தான் கேட்பேன் என்று சொல்லவைத்த இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் இன்று. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிப்படங்களிலுமாக ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜா தான் அறிமுகமான அன்னக்கிளி படத்தில் அதுவரை வெளிவந்த பாடல்களிலிருந்து வித்தியாசமாக, புதுமையாக தனது இசைப் பயணத்தைத் தொடங்கி, தனது இயல்பான, நாட்டுப்புற இசையோடு வெஸ்டர்ன், மற்றும் கர்நாடக சங்கீதத்தை கலந்து சாதாரண மக்களின் இசையை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தார்! அதே வேளை ஒரு குறிப்பிட்ட மேல்வர்க்க குழுவினரிடம் மட்டும் சிக்கியிருந்த கர்நாடக சங்கீதத்தை சாதாரண மக்களும் ரசிக்கும் வகையில் எளிமையாக்கி எல்லாத் தரப்பினரிடமும் கொண்டு சேர்த்தார்!. அவர் உடல் நலடத்துடன் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து தனது இசைப் பயணத்தை தொடர்ந்திட வாழ்த்துவோம் !
சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடியை இவர் பாராட்டிப் பேசியது சர்ச்சிக்குரியதானது. இதுபோல் தேவையற்ற அரசியலுக்குள் தலைகாட்டி தன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திக் கொண்டார்
Comments