அகிலன் (Akilan) பிறந்த நாள்

 நாவல் ஆசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் திறன் வாய்ந்தவரும் தமிழில் முதல் ஞானபீட விருது பெற்றவருமான அகிலன் (Akilan) பிறந்த நாள் இன்று (ஜூன் 27). 




இவரது . சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் சீனம், மலாய், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும்ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

‘பாவை விளக்கு’ திரைப்படமாக எடுக்கப்பட்டது. இவரது ‘கயல் விழி’ என்னும் புதினம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.

அகிலன் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், தினமணி போன்ற இதழ்களில் 1950கள் முதல் 80கள் வரை அகிலன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு இருபாகங்களாக வெளியாகி இருக்கின்றன.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,