கிராவை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்?

 கிராவை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்?




கிராவை நான் அப்பா என்று அழைப்பேன். அவர் என்னை பாபு என அழைப்பார். என் அம்மா என்னைச் செல்லமாக பாபு என்று அழைப்பார். நான் முதன் முதலில் கிராவை பார்க்கும்போது அவர் என் பெயரை கேட்டபோது பாபு என்று சொன்னதினால் அன்று முதல் பாபு என்றே அழைக்கிறார். அவர் என்னை ஒரு முறை கூட இளவேனில் என்று சொன்னதில்லை. நாங்கள் இருவரும் அப்பா மகன் உறவு மட்டும் இல்லை. அதையெல்லாம் மீறி நாங்கள் இருவரும் நண்பர்கள். அவரும் நானும் பேசாத விசயமே இல்லை. அவர் பேசும்போது சில சமயங்களில் ரெக்கார்டு செய்வேன். ’இதை எல்லாம் எழுதிவியா பா’ என்று கேட்பார். ’எழுதவே கூடாது என்பதற்காகத்தான் இதில் ரெக்கார்டு செய்கிறேன்’ என்று சொல்லுவேன். எனென்றால் அன்னியோன்னியம் போய்விடும். விடியற்காலை 2 மணி வரை எல்லாம் பேசியிருக்கிறோம். ’பேசிமுடித்ததும் கிளம்புறியா’ என்பார். ’மணி 2 ஆகிறது தூக்கம் வருகிறது’ என்பேன். ’இன்னும் ஒரு மணி நேரம் மட்டும் பேசுவோம்’ என்று சொல்லுவார். அதுதான் நட்பு என்று நினைக்கிறேன்.
கிராவுடன் உங்களுக்கு நடந்த மறக்கமுடியாத விசயம் என்றால் எதைச் சொல்வீர்கள்
நிறைய இருக்கிறது. இது ரகசியம்தான் ஆனாலும் பரவாயில்லை சொல்லிவிடுகிறேன். கிராவுக்கு வரும் கடிதங்களை நான் படிப்பேன் (சிரிக்கிறார்). கடிதம் எழுதியவரை பற்றிப் பேசுவார். அந்த கடிதத்திற்கு எழுதப்படும் பதில் கடிதம் பற்றி பேசுவார். ஒருநாள் அந்த மாதிரியான நேரத்தில் ’இவ்வளவு நாள் நான் வந்திருக்கிறேனே! ஒரு நாளாவது எனக்கு கடிதம் போட்டிருக்கிங்களா அப்பா’ என்றேன். ’நீ எனக்கு எப்பாயாவது கடிதம் எழுதிருக்கியா’ என்று கீரா கேட்டார். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது கடிதம் எழுதவேண்டும் என்று ஆனால் இந்த நாள் வரை நானும் அவருக்கு கடிதம் எழுதவில்லை. அவரும் எனக்கு எழுதவில்லை. இதுதான் நானும் கிராவும்.
- புதுவை இளவேனில் நேர்காணலில்
நன்றி: asiaville.com





Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,