ம.பொ.சி
இன்று விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆன ம.பொ . சிவஞானம் பிறந்த நாள். (ஜூன் 26, 1906) இவர் ம.பொ.சி என அனைவராலும் அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்துள்ளது
மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் பேராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டு போராடியபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார். திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆயினும் அப்போராட்டத்தால் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது. அது போல குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.
Comments