பேரிழப்பு அவர் குடும்பத்துக்கு மட்டுமல்ல.

 குங்குமம், முத்தாரம், வண்ணத்திரை,

குங்குமச்சிமிழ் என நான்கு பத்திரிகைகளைப் பாவைச் சந்திரன் ஒரு சேர கவனித்துக் கொண்ட அந்தக் காலக் கட்டத்திலேயே
"ரொம்ப stress பாவை. உடல் நிலையை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்." என்பேன்.

சில நாட்களாகவே ப்ரியா கல்யாணராமனுக்கு உடல் நலமில்லை. என்னுடன் அவர் நாலைந்து நாட்களாகப் பேசவில்லை.
வாட்ஸ் அப்பிற்கும் வரவில்லை. "என்ன ப்ரியா என்ன கோபம்?" என்று கேட்டேன். யாராவது பேசவில்லை என்றால் கோபம் என்றே நினைத்துக் கொள்வேன்.
"ஐயோ..கோபமெல்லாம் இல்லீங்க. உங்க கிட்ட போய் கோபப்பட முடியுமா? உடம்பு சரியில்லீங்க.." என்றார். "என்ன உடம்பு ப்ரியா?" "வர்டிகோங்க "
"வார்டின், ஸ்டூஜில் ரெண்டும் தருவாங்க. நான் வர்டிகோவில் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்". என்றேன்.
அதன் பின்னர் சரியாகி நார்மலானார். மீண்டும் பேசத் துவங்கினார். பாவைக்குச் சொன்னதையே இவரிடமும் சொன்னேன்.
பாவைக்காவது நான்கு பத்திரிகைகள். இவருக்கு...?
குமுதம், சினேகிதி, பக்தி, ரிப்போர்ட்டர், கல்கண்டு, மாலைமதி, மீண்டும் தீராநதி...
மொத்தம் ஏழு பத்திரிகைகள். எல்லாமே அடுத்தடுத்து வருபவை. அப்பாடா..ஒரு இஷ்யூ முடிந்ததா என்று மூச்சு விடுவதற்குள் மறு இஷ்யூ... தமிழச்சி ஆண்டாள் எழுதின கையோடு கேள்வி பதிலில் இடையழகி யார் நயன்தாராவா, த்ரிஷாவா, ஆண்ட்ரியாவா, என்பதற்கு பதில் எழுதணும். சினேகிதரின் பூரானைப் பூரான் கடித்த விஷயத்தை அத்தனை நகைச்சுவை கலந்து சொல்லணும். அடுத்து ஓபிஎஸ் ×ஈபிஎஸ் எழுதணும். கட்டுரைகள் சரி பார்க்கணும். கதைகள் சரி பார்க்கணும்.. என்னதான் வர்ஸடைல் பேனா என்றாலும் இப்படி நிமிஷத்துக்கு நிமிஷம் நீலம், பச்சை, சிவப்பு என்று நிறம் மாற்றி மாற்றி மை ஊற்றி எழுத எப்படிப்பட்ட திறமை வேண்டும்!.
எஸ் ஏபி காலத்தில் குமுதம் என்கிற தங்கத் தேரை கட்டி இழுத்தவர்கள் நான்கு பேர்கள். எஸ்ஏபி, ர.கி. ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், புனிதன்.
இந்த நான்கு தூண்களில் கட்டப்பட்டிருந்தது குமுதம் மாளிகை. அப்போது குமுதம், கல்கண்டு தவிர வேறு இல்லை. கல்கண்டு தமிழ்வாணனிடம் இருந்தது. தற்போதோ நான் சொன்ன ஏழு பத்திரிகைகள் தவிர டாக்டர் குமுதம் வேறு. அத்தனையும் சேர்த்து ஒருவர் பார்ப்பது என்பது சாமானிய காரியமா என்ன..? நான் சொன்ன மாதிரி ஒரே பேனா எத்தனை மைகளை மாற்றி எத்தனை நேரம் எத்தனை நாட்கள் எழுதும்? அதற்கு அசுர பலமும், திறமையும் வேண்டும். ப்ரியா கல்யாண ராமனிடம் திறமையும், பலமும் இருந்தது என்றாலும் எத்தனை காலம் தாக்குப் பிடிக்க முடியும்? "பீலிபெய் சாக்காடும் அச்சிரும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.."
இதுதான் ப்ரியா கல்யாண ராமனுக்கு நடந்தது...
பேரிழப்பு அவர் குடும்பத்துக்கு மட்டுமல்ல.
குமுதத்திற்கும்தான். இனி இப்படிப்பட்ட பன்முகத் திறமை கொண்ட ஒருவர் எங்கிருந்து கிடைப்பார்?
எப்படி கண்டுபிடிக்கப் போகிறார்கள்...?
எழுத்தாளர் இந்துமதி முகநூல் பதிவு

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,