ஆலங்குடி சோமு நினைவு தினம்

 ஜூன் 6, 1990 திரைப்பட பாடலாசிரியர் ஆலங்குடி சோமு நினைவு தினம் இன்று.


ஆலங்குடி சோமு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியில், 1932, டிச., 12ல் பிறந்தார். திரையுலகில் இவரை, பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியவர், அவரின் நண்பர் புரட்சிதாசன். சின்னப்ப தேவரின், யானைப்பாகன் படத்தில் இடம்பெற்ற, 'ஆம்பளைக்குப் பொம்பளை அவசியம் தான்...' என்ற நகைச்சுவை பாடல் தான், அவர் எழுதிய முதல் பாடல்.

'இரவு வரும், பகலும் வரும், உலகம் ஒன்று தான்; மலருக்குத் தென்றல் பகையானால்; துள்ளுவதோ இளமை, தேடுவதோ தனிமை...' உள்ளிட்ட, ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். 

தாயில்லாமல் நான் இல்லை

தானேஎவரும் பிறந்ததில்லை

ஆண்டவன் உலகத்தின் முதலாளி -

அவனுக்கு நானெரு தொழிலாளி

அன்னை உலகின் மடியின்மீது

அனைவரும் எனது கூட்டாளி

.1960 தொடங்கி, 1997 வரை 35 ஆண்டுகளில் எண்பது படங்களுக்கு 170 பாடல்கள் எழுதியுள்ளார் ஆலங்குடி சோமு. இவர் கடைசியாக எழுதியது ‘பொற்காலம்’ படத்திற்கு எழுதியது 1997-இல் வெளிவந்தது.

இவர் கே.பாலசந்தரின் இயக்கத்தில் நாகேஷ், ஜெமினிகணேஷ், ராஜஸ்ரீ, பேபி ராஜி, வசந்தா, விஜயலலிதா நடித்த ‘பத்தாம் பசலி’ என்ற படத்தையும், ஜெய்சங்கர், ஜெயகௌசல்யா, ஜே.பி.சந்திரபாபு, சுருளிராஜன், மனோகர், ஏ.சகுந்தலா, ரமாபிரபா, ஜஸ்டின் நடித்த ‘வரவேற்பு’ என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்தார். இவ்விரு படங்களும் வெற்றி பெறவில்லை. ஆனால் பத்தாம் பசலியில் இடம் பெற்ற ‘அம்மாடி எம்புட்டு தூரம் நடக்குறது’, ‘வெள்ளை மனம் கொண்ட பிள்ளையொண்ணு’, ’போடா பழகட்டும் ஜோடி’, ‘பத்தாம் பசலி மாமா…. மாமோய், அந்தப் பாடம் படிக்கலாமா’ ஆகிய பாடல்கள் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அது போல ‘வரவேற்பு’ படத்தில் இடம்பெற்ற ‘பொன் வண்ண மாலையில் நீ தொடும்போது’, ‘வரவேண்டும் மகராஜா தரவேண்டும் புதுரோஜா’, ‘ஆடல் அரங்கம் எந்தன் விழிகள்’ ஆகிய பாடல்களும் அன்றைய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும்.
எம்.எஸ்.வியிடம் அநேக சிறப்பான பாடல்களை எழுதியிருக்கிறார். “ஆண்டவன் உலகத்தின் முதலாளி”, “தாயில்லாமல் நானில்லை”, உள்ளத்தின் கதவுகள் கண்களடா”, போன்ற பல கருத்துள்ள தத்துவப்பாடல்களை இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய “பொன் மகள் வந்தாள், பொருட்கோடி தந்தாள்” என்றபாடல் ஆல்டைம் ஃபேவரைட்.
பிற்காலத்தில் வாத நோயினால் பாதிக்கப்பட்டு இதே நாளில் இயற்கை எய்தினார்.

. பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர் என, பன்முகம் உடைய, ஆலங்குடி சோமு மறைந்த  தினம் இன்று!Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,