இந்தியாவின் மிகக் கொடிய ரயில் விபத்து

 


வரலாற்றில் இன்று - இந்தியாவின் மிகக் கொடிய ரயில் விபத்து இதே நாளில் நிகழ்ந்தது. பீகார் மாநிலத்தில் 6-6-1981 அன்று ரெயில் ஆற்றுக்குள் விழுந்ததில் 600க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தார்கள். விபத்துக்கு உள்ளான அந்த பாசஞ்சர் ரெயில், சமஸ்திபூரில் இருந்து பான்மங்கி என்ற இடத்துக்கு போய்க்கொண்டு இருந்தது ஒன்பது பெட்டிகள் கொண்ட அந்த பாசஞ்சர் ரயில் கோசி ஆற்றின் குறுக்கே பாக்மதி ஆற்றுப் பாலத்துக்குள் நுழையவிருந்தபோது டிராக்கின் குறுக்கே ஒரு மாடு கடந்துகொண்டிருந்தது அதன் மீது மோதாமலிருக்க ரயில் டிரைவர் திடீர் பிரேக் போட்டதனால் அந்த அதிர்ச்சியில் ரயிலின் ஏழு பெட்டிகள் ஆற்றுக்குள் மூழ்கின. எல்லா பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூரை மீதும் பலர் தொத்திக்கொண்டு பயணம் செய்தனர். என்ஜினும், அதற்கு அடுத்த பெட்டியும் மட்டுமே ஆற்றுக்குள் விழாமல் தப்பின. சுமார் 200 பிணங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. மற்றவை ஆற்றோடு அடித்துச்செல்லப்பட்டன. 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி