பட்டுக்கோட்டை அழகிரி பிறந்த தினம்

 ஜூன் 23,.

அஞ்சா நெஞ்சன் என்றழைக்கப்படும் பட்டுக்கோட்டை அழகிரி பிறந்த தினம் இன்று (1900).


புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதியருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள வாவிடைமருதூர் கிராமத்தில் வளர்ந்தார். பத்தாம் வகுப்போடு பள்ளி படிப்பை முடித்துக் கொண்டவர் முதலாம் உலகப் போர் காலத்தில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

கூட்டுறவு சங்கமொன்றில் எழுத்தராகச் சேர்ந்தார். ரிவோல்ட் என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர்களாக இருந்த பெரியார், ராமநாதன், குத்தூசி குருசாமி ஆகியோர்களில் குத்தூசி குருசாமியை ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டு திரும்பினார்.

அழகிரிதான் முதன் முதலில் பட்டுக்கோட்டையில் சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்ட போது ராமாமிர்தம் அம்மையாருடன் சேர்ந்து தஞ்சை முதல் சென்னைவரை நடைப்பயண இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார்.

திருவாரூரில் சுயமரியாதை கூட்டத்தில் கனல் பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்த போது காசநோயின் தாக்கம் மயங்கி கீழே விழுந்தார். 28.03.1949 அன்று மரணமடைந்து விட்டார்.

“அஞ்சாநெஞ்சன் அழகிரியின்பால் தான் கொண்ட அன்பால் ஈர்க்கப்பட்ட பேச்சால் தான் வளர்ந்து நிற்கிறேன்” என்ற கலைஞர் மு. கருணாநிதி. தன் மூத்த  மகனுக்கு . அழகிரி என்று பெயர் சூட்டினார். எம்.ஜி.ஆர் முதல்வராக வந்த போது அவரும் அழகிரிக்கு மரியாதை செய்யும் விதமாக பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்து கழகம் தொடங்கினார். பட்டுக்கோட்டையில் அவர் வாழ்ந்த இடத்தில் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி