கண்ணகி சிலை
வரலாற்றில் இன்று ஜூன் 3 - 2006, சென்னை மரீனா கடற்கரையில் அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது. இச்சிலையானது 1968ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றதை ஒட்டி சிலப்பதிகார நாயகியாம் கண்ணகியைப் போற்றும் வண்ணம் அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணாவால் நிறுவப்பட்டது. 2001ம் ஆண்டு பதவிக்கு வந்த ஜெயலலிதா ஜோதிடர்களின் ஆலோசனைப்படி இச்சிலையை அங்கிருந்து அகற்றினார். இதற்கு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ் அறிஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் 2006ம் ஆண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னரே முதலமைச்சர் கருணாநிதியால் அவரது பிறந்த நாளன்று கண்ணகி சிலை முன்பிருந்த இடத்திலேயே மீண்டும் நிறுவப்பட்டது
Comments