இன்று உலக யோகா நாள்
இன்று உலக யோகா நாள் "யோகா” பயிற்சி இந்து மதத்துக்கு மட்டும் உரித்தானது அல்ல. அனைத்து மதத்தவருமே இப்பயிற்சியினை செய்யாலாம்" என்று அரசு சார்பில் கூறப்படுகிறது. உலகெங்கிலும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எண்ணற்ற மேலை நாட்டு மக்கள் யோகா பயிற்சிகளை பயின்று வருகிறார்கள். யோகா பயிற்சி "சூரிய நமஸ்கார் முத்திரை" யிலிருந்துதான் துவங்குகிறது. யோகா தின சின்னமும் அதனையே காட்டுகிறது. இது இஸ்லாமிய இறை வழிபாட்டுக்கு முரண்பாடாக இருப்பதால் இஸ்லாமிய அமைப்புகள் யோகா பயிற்சியினை எதிர்க்கிறார்கள். இதனை கடவுள் வழிபாடாக கருதாமல் யோகா ஆசிரியருக்கு செலுத்தும் வணக்கமாகக் கொள்ளவேண்டும் என அவர்களுக்கு சமாதானம் கூறப்படுகிறது.எது எவ்வாறாயினும் யோகா பயிற்சிகள் பாஜக வினரால் கண்டுபிடிக்கப்பட்டதோ நிறுவப்பட்டதோ அல்ல. அது பன்னெடும் காலமாய் பயிற்றுவிக்கப்படும் ஒரு கலை ஆகும்
Comments