:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!
: மாதவிடாய் கோளாறுகளா? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்! மாதவிடாய் கோளாறுகளா? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளம் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் அதிக மாற்றங்களை சந்தித்து வருகிறார்கள். அதிக ரத்தப்போக்கு, இடைப்பட்ட ரத்தப்போக்கு, மாதவிடாய் காலத்தில் உடல் முழுதும் வலி, மாத கணக்கில் மாதவிடாய் வராமல் இருத்தல் என எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். நமது உடலில் 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். இதில் சிலருக்கு 25 முதல் 35 நாட்கள் வரையிலான இடைவெளியிலும் உண்டாகும். இது இயல்பாக நடப்பதே. ஆனால் 25 நாட்களுக்கு முன்னவோ அல்லது 35 நாட்கள் கடந்து மாதவிடாய் உண்டாகுமானால் பெண்கள் சற்று கவனம் கொள்ளுதல் அவசியம். மாதவிடாய் சுழற்சியில் இரு ஹார்மோன் சுரப்பிகளுக்கு முக்கிய பங்கு உண்டு ஒன்று ஈஸ்ட்ரோஜன் மற்றொன்று ப்ரஜஸ்டிரோன். மாதவிடாய் சுழற்சியில் முதல் 14 நாட்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆனது கருவுறுதலை மேம்படுத்தவும் கருவளத்தை பெருக்கவும் உதவுகிறது. இது கருப்பையை தூண்டும் மற்றும் அண்டு விடுப்பின் ஊக்கத்தை அளிக்கும்.
Comments