தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி ஜெயலலிதா ஆட்சியில் கைது செய்யப்பட நாள்

  வரலாற்றில் இன்று ஜூன் 30, 2001   தமிழக முன்னாள் முதல்வர்  கலைஞர்  மு கருணாநிதி ஜெயலலிதா ஆட்சியில் கைது செய்யப்பட நாள்






அன்றய தினம் அதிகாலை 1.30 மணி அளவில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த முத்துக்கருப்பன் தலைமையிலான காவல்படை கருணாநிதியின் வீட்டில் அதிகாலையில் நுழைந்து உறங்கி கொண்டிருந்த அவரை எழுப்பி விட்டு கைது செய்தது கைலி மட்டுமே அணிந்திருந்த  . கருணாநிதியை துணி மாற்றக்கூட அனுமதிக்கவில்லை காவல்துறை.

அணிந்திருந்த லுங்கியுடனே கைது செய்யப்பட்ட கருணாநிதியை ஓமந்தூரார் மாளிகைக்கு அருகில் இருந்த சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சிறிது நேரம் விசாரணை செய்தனர் மேம்பாலம் கட்டும் பணியில் ஊழல் நடைபெற்றதாக சென்னை மாநகர ஆணையர் அளித்திருந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு அந்த கைது நடவடிக்கை  அங்கிருந்து அவசரமாக வேப்பேரி அழைத்து செல்லப்பட்டார் கருணாநிதி, ஆனால் அதையும் போலீசார் வெளிப்படையாக செய்யவில்லை, முன்பக்கத்தில் பத்திரிக்கையாளர்களை அழைத்துவிட்டு பின்பக்கமாக வேறு காரில் கருணாநிதியை அழைத்து சென்று விட்டனர்.

பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 10ம் தேதி வரை சிறையில் அடைக்க. ரிமாண்ட் உத்தரவு பெறப்பட்டது சிறைக்கு கொண்டுபோகுமுன்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உடல்நல பரிசோதனை செய்யவேண்டுமென்று மாஜிஸ்திரேட் கூறியிருந்தார்.. ஆனால் அதனை மீறி காவல்துறையினர் அவரை நேராக சென்ட்ரல் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். விடிவதற்கு முன்னர் அவரை சிறையில் அடைக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா காவல் ஆணையர் முத்துக்கருப்பனுக்கு கடுமையாக உத்தரவிட்டிருந்ததே அதற்கு காரணம்.   சிறையில் அடைப்பதற்காக கருணாநிதி அழைத்து செல்லப்பட்ட போது சிறை வாசலிலேயே அமர்ந்து சுமார் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கருணாநிதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தகவலை அறிந்த தி.மு.க தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் அப்போது சென்ட்ரல் சிறைச்சாலைக்கு அருகே கூடினர். அந்தப் பகுதியில் இருந்த மேம்பாலத்திற்கு மேல் இருந்தபடியே கருணாநிதியின் கைதை கண்டித்து கண்டன குரல் எழுப்பினார்கள். அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது '”சிறையில் உங்களுக்கு முதல் வகுப்புதான் அளிக்கப்பட்டுள்ளது அங்கே மருத்துவக்குழு உங்களை பரிசோதிக்கும், தயவு செய்து ஒத்துழைப்பு தாருங்கள்” என்று முத்துக்கருப்பன் கெஞ்சலாக விடுத்த வேண்டுகோளின்படி கருணாநிதி சிறைக்குள் சென்றார் இந்தக் கைது தொடர்பாக இந்தியப் பிரதமர் வாஜ்பாய் தலைமைச் செயலாளர் மற்றும் ஆளுநரிடம் இருந்து அறிக்கை கோரினார். இந்தக் கைதை அரசில் தளத்தில் பல பிரிவுகளாக உள்ளவர்களும் கண்டித்தனர்[ இதை மனித உரிமைக் குழுக்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் அப்போது அரசியல் கூட்டு வைத்திருந்த  காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல்கட்சிகளும் கண்டித்தன

மறுநாள் நீதிமன்ற விசாரணைக்கு அவர் அழைத்து செல்லப்பட்ட போது  இந்தக் கைதில் காவல்துறை கையாண்ட பல தவறுகளை நீதிமன்றம் கண்டுபிடித்து கண்டித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்த ஆளுநர் பாத்திமா பீவி இரண்டு மாதங்களில் பதவி விலகினார். நாடெங்கிலும் எழுந்த கடுமையான எதிர்ப்பு அலைகளுக்கிடையில்  ஜூலை   6 ஆம் நாள் கருணாநிதி விடுதலை செய்யப்பட்டார். . அவர் மீதான ஊழல் புகாரும்  விசாரணைக்குப் பின்னர்  நிரூபிக்கப் படவில்லை   என்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி