உலக பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் ******************

 இன்று- 17 ஜூன் 2019

 ******************

உலக பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம்

 ******************


மனிதர்களின் தவறான நடவடிக்கைகளாலும் , சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும் பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதன்மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதைத் தடுக்க முடியும். இதனை உணர்ந்த ஐ.நா. சபை1994ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. பல்வேறு கல்வி அமைப்புகளும், அரசு சாரா நிறுவனங்களும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டி மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் வருடந்தோறும் இந்தத் தினத்தைக் கொண்டாடி வருகின்றன.

உலக வறட்சி ஒழிப்பு நாளான இன்று வறட்சிக்கு எதிரான செயல்பாடுகள் களையப்பட்டு, இயற்கையைக் காக்க விழிப்பு உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். நகர்ப்புறங்களில் பொருளாதாரம் சார்ந்து முக்கியத்துவம் அளிக்காமல் கிராமம் சார்ந்த பொருளாதாரத்தையும் ஊக்குவிக்க வேண்டும். மேலும், காடுகள் அழிப்பைத் தடைசெய்து  மரங்கள் வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும். இதனால் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு, மழைக் காலங்களில் மரங்கள் வீழ்வதைத் தடுக்கலாம். இவற்றை அரசு எளிய முறையில் நடைமுறைப்படுத்த இயலும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது வறட்சியைக் கட்டுக்குள் வைக்க இயலும்Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,