சர்வதேச யோகா தினம்.
சர்வதேச யோகா தினம்.
சர்வதேச முதல் யோகா தினத்தில் அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் பிரிமான்ட் நகருக்கு அருகில்
ஒரு பூங்காவில் அரசு அனுமதி பெற்று அங்கு செயல்படும் மனவளக்கலை மன்ற நண்பர்களோடு இணைந்து யோகா தினத்தை கொண்டாடினேன்.
யோகப் பயிற்சிகள் மனவளக்கலை பயிற்சிகள் சில அன்பர்களால் செய்து காட்டப்பட்டது.
துண்டுப் பிரசுரங்களும் வைக்கப்பட்டன பார்வையாளர்கள் பல துண்டுப் பிரசாரங்களை எடுத்துக்கொண்டு விவரங்கள் கேட்டு சென்றனர்.
யோகப் பயிற்சியில் யோகாசனம் என்பது ஒரு பகுதிதான்.
சுவாமி விவேகானந்தர் அவர்கள் நான்கு யோகங்களைப் பற்றி விரிவாக சொற்பொழிவாற்றி இருக்கிறார் நூல்களாக வந்திருக்கின்றன.
பக்தி யோகம் கர்மயோகம்
ராஜயோகம் ஞான யோகம்
என்று யோகத்தை நான்காக வகைப்படுத்தினார்.
பதஞ்சலி முனிவர் அட்டாங்க யோகம் என்று எட்டு வகை யோகங்களை விரிவாக எடுத்து வைத்திருக்கிறார்.
பகவத் கீதையிலும் யோகங்களைப் பற்றி விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
அனைத்தையும் ஒருங்கிணைத்து மனவளக்கலை யோகா என்றும்
Yoga for human excellence
என்றும் hu முறையாக பாடத்திட்டங்கள் பயிற்சி திட்டங்கள் வகுத்து
வேதாத்திரி மகரிஷி அவர்கள் தோற்றுவித்த உலக சமுதாய சேவா சங்கம் மனவளக்கலை மன்றங்கள் மூலமாக மிகச் சிறப்பாக பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
உடல் உயிர் மனம் அறிவு தெய்வம் (இயற்கை/ஆற்றல்)
இந்த நான்கிற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு யோகம்.
இந்த ஒருங்கிணைப்பு பயிற்சி முறைகளே யோகப் பயிற்சிகள்.
இனிமையான இணக்கமான வாழ்க்கை.
தனிமனிதன் அமைதி குடும்பத்தில் அமைதி ஊரில் அமைதி நாட்டில் அமைதி உலகத்தில் அமைதி.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
எல்லப்பன்
Comments