திருநங்கைகளுக்கான மிகவும் பிரசித்தி பெற்ற `மிஸ் இண்டர்நேஷனல் குயின்' என்ற அழகிப் போட்டி

 மிஸ் இண்டர்நேஷனல் குயின் அழகிப்பட்டத்தை திருநங்கை வென்றுள்ளார்


, திருநங்கைகளுக்கான மிகவும் பிரசித்தி பெற்ற `மிஸ் இண்டர்நேஷனல் குயின்' என்ற அழகிப் போட்டி கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா நகரில் இந்த போட்டி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஃபுஷியா அன்னே ரவேனா (Fuschia Anne Ravena) என்பவர், மிஸ் இண்டர்நேஷனல் குயின் அழகிப்பட்டத்தை வென்றுள்ளார். 22 அழகிகள் கலந்து கொண்ட இறுதி சுற்றில் கொலம்பியா மற்றும் பிரான்ஸ் நாட்டு அழகிகள் 2 மற்றும் 3-வது இடத்தை தட்டி சென்றுள்ளனர். மிஸ் இன்டர்நேஷனல் குயின் பட்டத்தை வென்ற ஃபுஷியா அன்னே ரவேனா கூறுகையில், "மக்கள் மத்தியில் அன்பு, அமைதி மற்றும் ஒற்றுமையைப் பரப்புவதற்காக செயல்படுவேன். அதன்மூலம் சமத்துவத்தின் முக்கியத்துவத்தை பரப்புவேன். நாம் அனைவரும் ஒரே வானத்தின் கீழ் வாழ்கிறோம், ஒரே காற்றை சுவாசிக்கிறோம். பல வேறுபாடுகளுக்கு மத்தியில் வாழும் போதிலும், நம் அனைவருக்கும் கிடைக்கும் காதல் என்பது உலகளாவியளவில் ஒரே விஷயமாக இருக்கிறது" என்றார்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,