முதலாவது உலகக் கோப்பை

 


வரலாற்றில் இன்று - ஜூன் 7, 1975 - உலகக் கிரிக்கட் வரலாற்றில் முதலாவது உலகக் கோப்பை போட்டிகள் லண்டன் ஓவல் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான நாளாகும். முதலாவது போட்டியில் இந்திய இங்கிலாந்து அணிகள் மோதின. 60 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 60 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 334 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 60 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 202 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,