முருங்கையின் மகத்தான மருத்துவ குணங்கள்

 முருங்கையின் மகத்தான மருத்துவ குணங்கள்நமது பாரம்பரிய உணவில் பலவித ஆரோக்கியமான பொக்கிஷங்கள் உள்ளன. பல வித நோய்களுக்கான மருந்துகள் உணவிலேயே உள்ளன. எனினும், இக்கால மக்கள், நம் பாட்டி கால உனவுப் பொருட்களைப் பார்த்து முகம் சுளிக்கின்றனர்.


அவர்களுக்கு இவற்றின் பயன்கள் பற்றியும் ஆற்றல் பற்றியும் தெரிவதில்லை. அத்தகைய உணவுகளில் ஒன்றுதான் முருங்கை. இதன் இலை முதல் காய் வரை அனைத்திலும் அதிக பயன்கள் உள்ளன. இந்த மரம் உலகம் முழுவதும் வளரும் மரமாக உள்ளது.


இது வட இந்தியாவின் இமயமலைப் பகுதியை பிறப்பிடமாகக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இது உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. ஊறுகாய் மற்றும் காய்கறிகள் தயாரிக்க முருங்கை இலை மற்றும் முருங்கைக்காய் பயன்படுத்தப்படுகின்றன. முருங்கைக்காய் சாம்பார் மிகவும் ருசியான ஒரு உணவாகும்.


முருங்கைகாய் சாம்பார், பொரியல், முருங்கைக் கீரை துவையல், பொடி, கூட்டு என அனத்தும் மிகவும் சுவையான உணவுகளாகும். முருங்கையின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.


இரைப்பை புண்களில் நன்மை பயக்கும்


முருங்கை இலைகளை உலர்த்தி நீண்ட நேரம் சேமித்து வைக்கலாம். கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து தவிர, பல வகையான வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இதில் காணப்படுகின்றன.


கிருமிகளால் பாதிக்கப்பட்ட பகுதியை கிருமி நீக்கம் செய்ய முருங்கை தூள் பயன்படுத்தப்படலாம். இரைப்பை புண்கள் மற்றும் இரைப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை கொல்லும் திறன் இதற்கு உள்ளது.


சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன


ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களைக் கொல்லும் கலவைகள். இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள்தான் பல நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கதிர்வீச்சு மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் சேதங்களிலிருந்தும் பாதுகாக்கின்றன.


முருங்கையில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், குர்செடின் கூடுதலாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களுக்கு தினமும் 7 கிராம் முருங்கை இலைப் பொடி வழங்கப்பட்டது. மூன்று மாதங்களில் அவர்களது இரத்தத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகரிப்பது கண்டறியப்பட்டது. இது இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது.


முருங்கை கொலஸ்ட்ராலை குறைக்கும்


கெட்ட கொலஸ்ட்ரால் உங்கள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் பல இயற்கை விஷயங்கள் இதில் உள்ளன. விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளது.


மார்பக புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது


முருங்கைக்காயில் புரதங்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது நுரையீரல், இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் திசுக்களைப் பாதுகாக்கிறது. இது உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கிறது. பெண்கள் தினமும் முருங்கைப் பொடியை உட்கொள்வதால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி